Tuesday, April 6, 2010

கண்ணீர்... (பாட்டு வடிவில்)

என் கண்களில் கண்ணீரை கண்டேன்
காரணம் அறியாமல் நின்றேன்
உன்னை பிரிந்த சோகத்தின் உச்ச
வெளிபாடுதான் என நினைத்தேன் - ஆனால்
உன் கண்களை பிரிய மனமில்லாமல்
வெளிவரும் கண்ணீரை கண்டும்
அதற்கு துணையாகவும் இணையாகவும்
மண்ணில் சேர்வதை நான் உணர்ந்தேன்.
                                                       
(என் கண்களில்...)

ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூவும் பூத்தது என்றும்
இருகுடம் தண்ணீர் ஊற்றி இரு பூவும் பூத்தது என்றும்
சிறுவயதில் ஆடிப்பாடியும் மகிழ்ந்ததும் உண்டு - எத்தனை
குடங்கள் கண்ணீர் ஊற்றினால் காதல்பூ மீண்டும் பூக்கும்... சொல்லிடு இறைவா நீயெனக்கு.
                                                        
(என் கண்களில்...)

இரவுக்கு பின் பகலும் பகலுக்கு பின் இரவும் கலந்திருப்பது வாழ்வில் ருசித்திடுமே
சுகத்திற்கு பின் சோகமும் சோகத்திற்கு பின் சுகமும் கலந்திடுவதுதான் காதலின் பசியோ
பசிக்காத வாழ்கையும் இங்குமில்லை அதனை ருசித்திடாத நெஞ்சமுமில்லை
பசிக்கின்ற சமயம் ருசியை அறிவதில்லை ருசியை தேடி எந்தன் பயணம்... என்று அடைவேனோ?
                                                       
(என் கண்களில்...)

2 comments:

கவிதன் said...

பாடல் வரிகள் அருமை .... இசையை சேர்த்து விட்டால் ஹிட்டுதான்! வாழ்த்துக்கள்! தொடரட்டும்.....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கவிதன்,

எனக்கு மகிழ்ச்சிதான்...

உங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...