கெடுவான் கேடு நினைப்பான்
பழமொழியல்ல
முதுமொழிதானடா சற்றே
நீயும் யோசித்து பாரடா...
இன்று எனக்கு நீ
கேடு விளைவித்து கொண்டு
நாளை உன்னையே நீ
கெடுத்து அழித்துக்கொள்ள...
ரியல் எஸ்டேட்....
விளைந்த விளைநிலங்கள்
விற்கும் விலைநிலங்களாக....
மாறியது மனிதனா
மாற்றியது மனிதனா புரியாமல்....
டிஷ் ஆன்டனா...
வீட்டுக்கு வீடு ஒர் மரம்
வளர்க்க இடமில்லை - ஆனால்
வீட்டின் தளங்களின் மேலே
குடையாய் விரிந்து கொண்டு
எட்டி பார்த்து கொண்டும்...
செல்போன் டவர்...
மரம்போல் உயர்ந்து இருக்கின்றாய்
பறவைகளும் ஏமாந்து உன்னிடம்
மனிதனை விட உயர்ந்து இருக்கின்றோம்
என்று தஞ்சம் அடைந்து கொண்டு
உயிர்களை இழந்து கொண்டும்...
இதுபோல் எத்தனையோ
அறிவியலின் வளர்ச்சிகள்
மனிதனின் வாழ்கையை
அழிக்கும் நிகழ்ச்சிகள்...
2 comments:
உண்மை வாசன்! இன்று இல்லங்கள் தோறும் சிறுமரமாய் டிஸ் ஆனடெனாவும், பெரிய ஆலமரமாய் டெலிபோன் டவரும் காட்சி அளிக்கின்றன. அழிவை நோக்கிப் போகும் மனிதம் அதில்தான் வாழ்வு இருப்பதாக... இது போன்ற சிந்திக்க வேண்டிய கருத்துகளைக் கவிதையாக்க வாசனால்தான் முடியும்...அருமை...
அன்புள்ள ஆதிரா,
உங்களுடைய எண்ணத்தை பகிர்ந்துகொண்டமைக்கும் மற்றும் ஆதரவுக்கும் மிக்க நன்றி...
Post a Comment