Sunday, April 11, 2010

அதிர்ச்சியும்... ஆனந்தமும்...


யாரும் அற்ற தனிமையில்
மாலை பொழுது மறை(ற)ந்து
இரவு தொடங்கும் வேளையில்
நீயும் நானும் இனிமையாய்
கண்களால் மட்டும் பேசிக்கொண்டு...
உன்உடலில் மெல்லிய ஓர்அதிர்ச்சி
காரணம்....
எதிர்பாரமல் துண்டிக்கப்பட்ட
மின்வெட்டினால் தோன்றிய பயமோ?
இல்லை...
தெரியாமல் உன்னைத்தொட்ட
என்கரங்களினால் உண்டாண உணர்வோ?



அந்தவேளையிலும் உன்னின்
முகத்தில் கண்டேன் சிகப்பை...
காரணம்...
வான்மேகத்தில் மறைந்திடாமல்
நிலாமகள் நம்மை பார்க்கின்றாள்
என்று நெஞ்சில் கூச்சமோ?
இல்லை...
மீண்டும் மின்இணைப்பு வந்து
நம்மை பிரித்து விடும்
என்று முகத்தில் வெட்கமோ?

6 comments:

Aathira mullai said...

இதயச் சொலையில் காதல் மலர் பூத்தால் வானச்சோலையின் நிலவு மலர்கூட அழகு குறைந்து விடுகிறாள். குளிர்கின்ற நிலவொளியும் தகிக்க ஆரம்பித்து விடுகின்ற காதல் மனம் ஆவலை மீறும் போது. இருளை வேண்டும் இளமனத்தின் இனம் புரியா தவிப்பை அழகுத் தமிழ் கண்டது உன் கவிதையில்... வாழ்த்துக்கள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

இதயசோலையில் காதலர்களுக்கு நிலவின் ஒளி மகிழ்ச்சிபோல்... இந்தபக்கத்தில் எனக்கு உங்களின் வரிகள் மகிழ்ச்சியாய்...

Buvan said...

superab............by thambi vettothi sundaram

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள விக்கி,

தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...

Priya said...

மிகவும் ரசித்து படித்தேன்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பிரியா,

தங்களுக்கு பிடிக்கின்ற வகையில் நான் எழுதியதும்...
அதனை நீங்கள் படித்தும்,ரசித்தும்...

என்னுடன் பகிர்ந்தும் கொண்டமைக்கும் மிக்க மகிழ்ச்சி...

நன்றி...