Tuesday, April 20, 2010

காதல் திருமணம் - ஓர்பார்வை

அன்று..
பிடித்த பெ(ஆ)ண்
என்றபோதும் மறுத்ததும்
படித்த பெ(ஆண்)
என்றபோதும் முறைத்ததும்
இந்த சமூகம்...

இன்று...
சமூகம் பார்க்கும் ஜாதிகளை
மற(றை)ந்தது என்றபோது
முகம் மலர்ந்தேன்...

ஆனால்,
வருமானம் தரும் நிதிநிலையை
பார்த்து என்றபோது
அகம் நொந்தேன்...

6 comments:

safeer said...

அருமையான அனுபவம் நண்பா தொடர்ந்து உங்கள் அன்பான அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
நன்றி நன்றி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

நண்பா அனுபவமுனு சொன்னது சரிதான்... ஆனால் என்னுடைய சொந்த அனுபவம் இல்லை...

தங்களின் கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி...

வைகறை நிலா said...

சினிமாவிலும், சீரியல்களிலும்தான் காதலுக்கு, ஜாதி, மத, பொருளாதார வேறுபாடு பார்க்காமல் முக்கியத்துவம் கொடுப்பார்கள்..
யதார்த்த உலகில் பொருளாதாரம்தான் முக்கியம்..

அற்புதமான கவிதை...

அண்ணாமலை..!! said...

பால் வேறுபாடின்றி
இப்போது எல்லா
மட்டத்திலும் பணம்தான்
நண்பரே!

உங்கள்...
சிந்தனை...
அருமை..

Unknown said...

“அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம்இல்லை”

அருமைக் கவிதை நண்பா

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழர்கள்,

நிலா, பாலன் & அண்ணாமலை உங்கள் மூன்று பேரின் கருத்தை ஆமோதிகின்றேன்...

மிக்க நன்றி...

எப்படியோ சமூகம் மாறினால் சரி...