என்னுயிர் நண்பா!
உன் உள்ளத்தின்
உள்ளேயுள்ள அன்பினை
பாசத்தினை பற்றினை
பண்பாக பரிசளித்தாய்
வாழ்த்தை வரிகளில் - அதனால்
என் நிலையில் தடுமாறினேன்...
என்னருகில் நீ இருந்திருந்தால்
மகிழ்ச்சியில் அரவணைத்திருப்பேன்...
கண்ணுக்கு எட்டாத தொலைவிலும்
கண்ணால் காணாத நிலையிலும்
நாம் கடந்து இருப்பதனாலும்
செய்வதறியாது தவிக்கின்றேன்...
ஏனெனில்...
நன்றியென்னும் நல்வார்த்தை
நட்பெனும் நல்லுறவில்
உபயோகிக்ககூடாதுயெனும் உன்
உடன்படிக்கையின் உடன்பாட்டினால்தான்
என் செய்வேன் உனக்காக....
9 comments:
அழகான அற்புத வரிகள் என்னை சந்தோஸத்தில் சிலிர்க்க வைத்து விட்டது நண்பா நீங்கள் எனக்கு கிடைக்க என்ன தவம் செய்தேனோ
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
என்னுயிர் நண்பா!....நண்பனுக்கு கவிதை என்பதால் பிடித்து போனது...
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்ல நண்பனுக்கு ஒரு இடம் இருக்கனும்....
நல்ல நண்பன் அமைவதும் பாக்கியமே...அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்...
இந்த கவிதை உங்கள் நண்பனுக்கு சமர்ப்பணமோ...அதனாலே இந்த கவிதையும்...இதைப்படைத்த இதயத்தையும் வாழ்த்துகிறேன்...
சபீர்....
நீங்கள் எனக்கு கிடைக்க என்ன தவம் செய்தேனோ...
சபீரும் தனது அன்பினை தவம் என்றவார்த்தையால் உன்னதத்தையும் நன்றியையும் வெளிப்படித்திஉள்ளார்...
வாழ்க.....pon...
இந்த வரிகள் சபீர்..
உங்களுக்கு மட்டும் அல்ல..
எங்களுக்கும்
தானாக்கும்..
(..ச்சும்மா..!!)
பெருகட்டும்
நமது
நட்புகள்!
அன்புள்ள சபீர்,
உங்களை போன்ற பல இனிய நண்பர்கள் அமைய நானும் ஏதோ தவம் செய்திருக்க வேண்டும்...
அன்புள்ள Anonymous...
நீங்கள் கூறுவதுபோல் நட்பு / நண்பன் என்றால் எல்லாருக்கும் மனதுக்குள் ஒருவித ஆனந்தம்.
நம்மின் நட்பும் தொடர்ந்திட வேண்டுக்கின்றேன் இறைவனிடம்...
அன்புள்ள அண்ணாமலை,
கண்டிப்பா இந்தவரிகள் என் பார்வையில் உங்கள் அனைவருக்கும்..
உங்கள் பார்வையில் எனக்கும், உங்களுடைய மற்ற நண்பர்களுக்கும் சேரட்டும்...
மென்மேலும் நமது நட்பு தொடர்ந்து பெருகிட நட்புடன் வேண்டுகின்றேன்.
கண்ணுக்கு எட்டாத
தொலைவில் இருக்கும்போதும்
நீங்கள் உங்கள் நண்பரை
நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே..
இதுதான் உண்மையான
நட்புக்கு சிறப்பு..
kunjam pasitha nenjukothikum thyai polathan nanaban avane,samikitathan unnai nenaithu vendi irukum anban avane, annai yei pol nanbanum undu, deivathai pol annaym undu, ok thanks maple
enge paru eppadi ellam kavadahi eluhinal nan aluthduven aamman
Post a Comment