Sunday, April 11, 2010
அதனாலும், ஆனாலும்...
(என் தோழியின் மனம்... வாழ்வில் நிம்மதியை தேடி...)
என் குணத்தையும்
காதலிக்கின்றாய் என்றிருந்தேன்
என் பணத்தை மட்டும்
காதலித்தது ஏனோ?
அன்று...
உன்னோடு சேர்ந்து காதலில்
விளையாடிய விளையாட்டு கொஞ்சம்தான்.
இன்று...
உன்னால் அழிந்து வாழ்வில்
திருமணமே விளையாட்டாய் வாழ்நாளில்.
உன்னால்...
வாழ்கையில் கண்டேன் ஏமாற்றம்
வாழ்வில் அடைந்தேன் துயரம்
அதனாலும், ஆனாலும்
வாழ்வில் கொண்டேன் மாற்றம்
வாழ்கையில் அடைவேன் உயரம்....
மீண்டு நான்
விதியென்னும் உன்வடிவில் தொலைந்தேன்
மதியென்னும் மறுவடிவில் பிறந்தேன்
நானிருப்பது மட்டுமல்ல தொலைவு
உன்னிடமிருந்தும் தொலைந்து...
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
விதியால் தோல்வி கண்ட காதலின் சோக கீதம் மதியால் சுக கீதமாக பாடப்படும் ஆற்றாமை அழகு... வாழ்த்துக்கள்..
அன்புள்ள ஆதிரா,
தோல்வி என்ற இந்த நிலைமை மாறி அவள் மேலும் பல சாதனைகள் படைத்து வாழ்வில் முன்னேறிட மீண்டும் ஓர் நல் வாழ்கை அமைந்திட உங்கள் சார்பாகவும் அவளை வாழ்த்துகின்றேன்.
நன்றி...
தோல்விகளில் துவளாது, மாற்றங்களை உயர்வாக்கும் மாற்றம் சிறப்பான எண்ணம் தோழரே! வாழிய!
வாழ்த்துக்கள்..
அருமை நண்பரே...
அன்புள்ள பாலன்,
தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...
நம் எண்ணம் போல் அவளும் வாழ்கையில் சிறந்திட உங்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றேன்.
அன்புள்ள அண்ணாமலையான்,
மிக்க நன்றி...
நீங்கள் எனக்கு தரும் ஊக்கம் எனக்கு மட்டுமல்லாது அவளது வாழ்விற்கு மேலும் தரவேண்டும் நல்ல ஆக்கம்...
அன்புள்ள டா.ஸ்ரீஜித்,
தங்களின் வருகைக்கும் மற்றும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
சரி விடுங்க! அந்தப் புள்ள கொடுத்து வச்சது அவ்வளவுதான்!
இல்லையென்றால் இதுபோல் கவிதைகள் எங்களுக்குக் கிடைக்குமா என்ன?
..
(என்ன ஒர் சுயநலம்-னு திட்டாதீங்க.!)
அன்புள்ள அண்ணாமலை,
தங்களின் வருகைக்கும் மற்றும் எண்ணத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
சுயநலம் எல்லாருடைய வாழ்கையிலும் கலந்திருக்கும் ஒன்று.
என்னுடைய கவிதைகளை நான்கு பேராவது படிக்கவேண்டும் என்பது என் சுயநலம். ஆனால் அதிலும் ஒரு பொதுநலம் எண்ணம் யாராவது ஒருவருக்காவது இந்த வரிகள் வாழ்வில் ஊக்கத்தை கொடுக்கும் என்பது.
அந்த பெண் இன்று சற்று மகிழ்ச்சியாய் வாழ்கின்றாள். அதுபோல் மற்றவர்கள் யாராவது பாதிக்கப்பட்டிருந்தாலும் வாழ்வில் முன்னேற்றம் கண்டு இந்த சமுதாயத்தில் மகிழ்வுடன் வாழவேண்டும் என்பதே என் நோக்கம்.
Post a Comment