நான் பயணிக்கும்
பேருந்தும் போக்குவரத்து
நெரிசலில் சிக்கிதவிப்பது
போன்றே என்மனதும்
பலநேரம் அலைபாய்கிறது...
உனக்காக நான்
அனுப்பிய குறுச்செய்திக்கு
மறுபதில் உன்னிடமிருந்து
எதிர்பார்த்து வராதசமயங்களில்...
சிலநேரங்களில்...
நீபார்த்தும் பதிலேதும்
அனுப்பாமல் போனாலும்
போக்குவரத்தின் விபத்தில்
சிக்கிஇறந்து போயிருக்க
கூடுமென்று எண்ணியே
என்மனம் என்னை
சமாதானம் செய்துவைக்கிறது...
11 comments:
ஏன் அபசகுனமாக சிந்திக்க வேண்டும்??
//போக்குவரத்தின் விபத்தில்
சிக்கிஇறந்து போயிருக்க
கூடுமென்று எண்ணியே
//
நல்ல யோசிக்கறீங்கய்யா
அருமை நண்பரே
நல்லாயிருக்குங்க வாசன்...
//போக்குவரத்தின் விபத்தில்
சிக்கிஇறந்து போயிருக்க
கூடுமென்று //
எது?அவள் அனுப்பிய பதில் செய்தியா?
அண்ணே என்ன இப்படி எல்லாம் பறந்து பறந்து யோசிக்கிறிங்க ..
வரிகளை கோர்த்த விதம் அருமை .. அண்ணே
அன்புள்ள இராஜராஜேஸ்வரி,
மிக்க நன்றி....
அபசகுணம் இல்லை தோழி... மனதிற்கு ஓர் சமாதானம்...
ஏக்கத்தை போக்கிகொள்ள ஒருவழி வேண்டுமே...
அன்புள்ள வேலு,
மிக்க நன்றி...
தங்களின் வருகை மகிழ்ச்சி தருகிறது...
அன்புள்ள பாலாஜி,
மிக்க நன்றி...
நலமா? நீண்ட நாட்கள் ஆகிவிட்டது உங்கள் கருத்துகளை பார்த்து...
அன்புள்ள சந்திரா,
மிக்க நன்றி....
நான் அனுப்பிய குறுஞ்செய்தியே.... இறந்திருக்க வேண்டும்...
அவள் பதிலளிக்க விரும்பாமல் இருந்திருக்க மாட்டாள் என்ற உணர்வு எனக்குள்
அன்புள்ள அரசன்,
மிக்க நன்றி...
மிக்க மகிழ்ச்சி தம்பி..
அது விபத்தில் சிக்க வில்லை தோழரே!
நம்ம ஊர் டிராபிக் அப்படி அதனால சற்று தாமதமாக வரும் என்று எண்ணி கொள்ளுங்கள் வாசன் !
Post a Comment