Thursday, April 7, 2011

என் விடியல்...



அன்று...
பொழுது புலர்ந்ததை
சேவல் கூவியது
கேட்டு ரசித்து
துயில் எழுந்தேன்!

பின்....
கடிகாரத்தின் மணியோசை
காதினில் ஒலித்திடவே
விடியலை அறிந்து
தூக்கத்தை கலைத்தேன்!!

இன்றோ....
உந்தன் குறுஞ்செய்திகள்
வந்து எழுப்பினால்
மட்டுமே பொழுது
விடிவதாய் உணருகிறேன்!!!

ஆனால்...
மூடுபனிகாலத்தில் கூட
பொழுதுகள் அதிகாலையில்
விடிந்தது சுகமாய்...
இளவேனிற்காலத்தில் ஏனோ
பொழுதுகள் விடிய
தாமதமாகி போகின்றது...
சிலநாட்கள் விடியாமலே
போவதையாவது நீயறிவாயோ?

4 comments:

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை நாளுக்கு நாள் மெருகேருது வாசன்...

ரேவா said...

உந்தன் குறுஞ்செய்திகள்
வந்து எழுப்பினால்
மட்டுமே பொழுது
விடிவதாய் உணருகிறேன்!!!


-- அழகான எதார்த்தம் சொல்லும் காதல் வரிகள் நண்பரே...வாழ்த்துக்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மனோ,

மிக்க நன்றி...

எல்லாம் தாங்கள் தரும் உற்சாகம் தான்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரேவா,

மிக்க நன்றி...

தங்களின் யதார்த்தமான பாராட்டில் மனம் மகிழ்கிறேன்...