Tuesday, April 12, 2011

என்னுள் நீ...


என்னுயிர் தோழியே...

ஓன்றா? இரண்டா? நீயென்றால் எனக்குள் ஞாபகம்வர
எத்தனையோ உண்டு எதைச்சொல்லி எதை விடுவேன்...

கண்களை மூடி நான் சுவாசிக்கும் காற்றும் நீயல்லவா...
கண்களை திறந்து நான் வாசிக்கும் கவிதையும் நீயல்லவா....

கண்களை மூடி நான் மெய்மறக்கும் இசையும் நீயல்லவா...
கண்களை திறந்து நான் ரசிக்கும் மழையும் நீயல்லவா...

கண்களை மூடி நான் கேட்கும் அலையோசையும் நீயல்லவா..
கண்களை திறந்து நான் படிக்கும் அலைபேசியும் நீயல்லவா...

கண்களை மூடி நான் தூங்கும் காலையும் நீயல்லவா...
கண்களை திறந்து நான் வியக்கும் மாலையும் நீயல்லவா...

கண்களை மூடி நான் தேடும் நினைவும் நீயல்லவா...
கண்களை திறந்து நான் காணும் கனவும் நீயல்லவா...

கண்களை மூடி நான் நினைப்பதெல்லாம் நீயல்லவா
கண்களை திறந்து நான் காண்பதெல்லாம் நீயல்லவா....

6 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு கவிதை, அசத்துங்கள் வாசன்....

nithubaby said...

அருமையான வரிகள் மிகவும் ரசித்து நேசித்தேன் ! இது போல் தொடர்ந்து எழுத இந்த தோழியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

Pranavam Ravikumar said...

I enjoyed a lot... I would rather say one of your best posts. My wishes. Do well. Have a great day!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மனோ,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நித்யா,

மிக்க நன்றி...

வரிகளை ரசித்து நேசித்து படித்து மறுமொழியிட்டு... என்னை மேலும் எழுத உற்சாகம் அளிக்கும் உங்கள் மனதிற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரவி,

மிக்க நன்றி...

என்னோடு நீங்களும் இணைந்து மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.... தங்களின் வாழ்த்தில் அகம் மகிழ்கின்றேன்...