Wednesday, May 11, 2011

வா(ட்)டியது மனம்...

பெரிய மேம்பாலம்
சிறிய துவாரம்
அழகிய மைனாவின்
உயரிய கூடு...

பலநாட்களுக்கு முன்பு
பிறந்திருக்க வேண்டும்
அந்த மைனாகுஞ்சு...

இன்றுதான் முதன்முறையாக
பறந்திட முயற்சியும்
செய்திருக்க வேண்டும்...

சிறகை விரித்து
மெல்ல பறந்தது
நெரிசல் நிறைந்த
சாலைக்கு மேலே...

மேலும் முடியாமலோ
பறக்க தெரியாமலோ 
சாலையின்மீதே விழுந்துவிட்டது
கண்ணிமைக்கும் நேரத்தில்...

இரண்டு வாகனம்
மட்டும் ஒவ்வொன்றாய்
அதன்மேலே ஏறாமல்
எப்படியோ சென்றது...

என்னுடைய வாகனம்
பக்கத்தில் கடந்தது
மெதுவாக அதற்குள்
என்னையும் நகர்த்திவிட்டது...

என்மனம் இன்னும்
கடக்காமல் அங்கேயே!!!
அதனுடைய நிலையெண்ணி
நான் செய்வதறியாது...

வாகன நெரிசலிருந்து
தொலைந்து வந்தது
வாகனம் மட்டுமே - என்னிதயமோ
தொலைந்தது அவ்விடமே...

3 comments:

Ranioye said...

nane ange irunta matiri irunthathu
pavam anta kuruvi!!lifela ipaditan niraya edatula mis pannidu varatu padurom!

Unknown said...

////தொலைந்து வந்தது
வாகனம் மட்டுமே - என்னிதயமோ
தொலைந்தது அவ்விடமே...////

எதையுமே தொலைத்த இடத்தில் தேடினால் தான் கிடைக்கும் ஸ்ரீ....
சீக்கிரம் போய் பாருங்க உங்க இதயம் திரும்ப கிடைக்கும்...


சிறகு விரித்து பறக்கத் தொடங்கிய சந்தோஷத்தில்..
திக்குமுக்காடி கீழே விழுந்தாலும்..
எப்படியோ இப்போது தப்பி விட்டது..
ஆனால் எப்போதும் தப்பிப் போகாது இருக்குமா...??
அதை மீண்டும் கூட்டில் விட்டிருக்கலாம் கற்பனையில்...

இருப்பினும் வாழ்வின் எதார்த்தம் தெரிகிறது வரிகளில்...
தவறிப்போன வினாடிகளையும் விஷயங்களையும் நினைத்து வருந்துவதே பலரின் நிலையாகிவிட்டது...!

வாழ்த்துக்கள் ஸ்ரீ...

nithubaby said...

படித்த என் மனமும் வாடியது ! அந்த பறவையை எண்ணி !