Friday, September 2, 2011

சு(சோ)கம்...


சாதரணமாய் பேசும்போது
உதாரணமாய் சொல்லிய
கணநேர வார்த்தைகள்கூட
காரணமாய் ஆகிவிடுகின்றது - உன்மனம்
(தோ)ரணமாய் மாறுவதற்கு...

7 comments:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.

கதம்ப உணர்வுகள் said...

உண்மையே வாசா...

தமாஷுக்கு சொல்வதா தான் நாம நினைப்போம் அது நாம் பேசுவோரின் மனதை காயப்படுத்துதுன்னு அறியாம போய்டுவோம்...

அன்பு வாழ்த்துகள் வாசா சொல்லாடல் கொண்ட அருமையான கவிதை பகிர்வுக்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரெத்னவேல்,

மிக்க நன்றி ஐயா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மஞ்சு அக்கா,

மிக்க நன்றி அக்கா...

தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் வாழ்த்து கலந்த உற்சாக பின்னூட்டத்திற்கும்...

ஹ ர ணி said...

ஒரு பழமொழி உண்டு. பேசிய வார்த்தை நமக்கு எஜமான். பேசாத வார்த்தைக்கு நாம் எஜமான். இன்றைக்கு உலகம் உணர்வுகளில் இல்லை வெற்றுச்சொற்களில் வம்புக்கிழுத்துப் பொழுதைக் கழிக்கிறது. பலரின் வாழ்வையும் கரைக்கிறது. பார்த்துதான் பேசவேண்டும் சாகிற வயதுவரைக்கும். அருமை வாசன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹரணி,

மிக்க நன்றி ஐயா...

சரியாக சொன்னீங்க நல்ல கருத்து நிறைந்த பழமொழியுடன்...

விளையாட்டு வினையாகும் என்பது போலவும்...
நாவினாற் சுட்ட வடு என்பது போலவும்...

வார்த்தைகள் சாகும் வரை மறைவதில்லை...

அம்பாளடியாள் said...

ஆகா அருமையா யோசிச்சு பக்காவா கவிதை வரிகளால்
அழகிய குறிகள் போட்டுள்ளீர்களே அது எப்புடி ?.....வாழ்த்துக்கள்
சகோ .