Friday, April 16, 2010

தலையணை - 2


நான் தலையணையை 
அணைத்து உறங்குவது
உந்தன் நினைவில்
உன்னை அரவணைத்து
கொண்டு மட்டுமல்ல...
எந்தன் நெஞ்சினில்
குடியிருக்கும் உனக்கு
வலிக்ககூடாது என்றும்தான்...

தலையணை -1

12 comments:

Anonymous said...

..வலிக்ககூடாது என்றென்றும்தான்...

வெண்பஞ்சு போன்றவள் அவளோ...


பெண்மைக்கு மரியாதை!!!!!

Unknown said...

ஹா... அருமை வாசன்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழா / தோழி,

இளம்பிஞ்சு கைகளும்
வெண்பஞ்சு மேனியும்
இளநெஞ்சும் கொண்டதனாலோ
இளவம்பஞ்சின் அணைப்பாய்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலன்,

ஒரு எழுத்து என்றாலும் உணர்வு பூர்வமான வடிவில் உங்களின் வாழ்த்திற்கு என் நன்றி...

கவிதன் said...

அசத்துறீங்க தல...... ரொம்ப அருமையா இருக்கு.... வாழ்த்துக்கள்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கவிதன்,

தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...

யாரு தல? நீங்க, எல்லாரும் (வாசகர்கள்) தான் எனக்கு முக்கிய தலைகள்.

Priya said...

மிக மெண்மையான கவிதை... நல்லா இருக்கு!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பிரியா,

தங்களின் வருகைக்கும் மற்றும் மனதின் எண்ணத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

safeer said...

ரொம்ப அருமையான வரிகள் நண்பா
தொடருங்கள் தொடருங்கள்

Aathira mullai said...

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சி என்பர்ர் திருவள்ளுவர். தங்கள் (கவிதை) நாயகி வள்ளுவன் நாயகியினும் மென்மையானவள். தங்கள் மனம் போல...அருமையான உணர்வு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

மிக்க மகிழ்ச்சி தங்களை இங்கேயும் காண்பதில்...

தொடர்ச்சியான ஆதரவை தங்களிடம் வேண்டி...

என் நன்றியுடனும் வணக்கத்துடனும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

தங்கள் மென்மையான உள்ளங்களின் எண்ணத்திற்கும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

என்னவளின் மென்மையை மேன்மை படுத்தியமைக்கும்...