Tuesday, January 5, 2010

தலையணை...

என்வாழ்வில் இதுவரை
பழக்கத்தில் இல்லாத
புதிதாய் ஏனோஇன்று
என்கரங்கள் அவளில்லாமல்
உன்னையள்ளி கட்டியணைத்து
கொண்டு மகிழயெண்ணியது
நான் என்னையறியாமலே
நீயென்னை அறிந்ததனாளோ?

மஞ்சத்தின் மேலே
பஞ்சுபோன்ற அவள்
விரல்களால் என்
நெஞ்சத்தை வருடியும்
வாஞ்சைகளை அறிந்தும்
தஞ்சமாய் ஒன்றாகி
என்னை சுகபடுத்தியும்
தானும் சுகபடுவாள் – அவள்போல்
நீயில்லாவிடினும்
உன்னை என்மனம் தேடியதேனோ?

சுகத்தை தணித்துகொள்ள
உன்னை தேடவில்லை
எந்தன் நெஞ்சம்
என்றபோதினும் என்
சோகத்தை பகிர்ந்து
கண்ணீரை உறிஞ்சி
உன்னுள் உறையவைத்து
என்னை சொந்தமாக்கி
என்னையும் மெளனமாக்கி
உன்னுனோடு உறங்கவைத்து
என் இதயத்திற்கும்
ஆறுதல் தந்ததனாளோ?

2 comments:

Unknown said...

கவிதை அருமை அருமை.... தங்களின் உள்ளுணர்வுகளை பிரதிபலிக்கும் பிம்பமாக உள்ளது....கடைசியாக உள்ள வரிகள் மிக மிக அருமை.......

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நன்றி...

உங்களின் ரசிப்பு தன்மையும், கருத்துக்களும் என் போன்ற கல்லையும் சிற்பமாக்கும் உளிகள்.

இது அன்புமனைவியை மகப்பேறுக்கு அனுப்பி வைத்துவிட்டு தனிமையில் வாடும் கணவன்மார்களுக்கும், பிரிந்து வாழும் நெஞ்சங்களுக்கும், காதல் மட்டுமில்லாது சில காரணங்களால் துக்கத்தை சுமந்துகொண்டு அதை மற்றவர்களிடம் சொல்லமுடியாமல் தவிக்கும் எத்தனையோ அன்பு நெஞ்சங்களுக்கும் அர்பணிக்கின்றேன்.


இவன்,
தஞ்சை.வாசன்