Monday, April 19, 2010

செம்பூவே... நீயே...

செவ்வரளி போல் செம்மேனி நிறம்
செம்பருத்தி போல் செதுக்கிய முகம்
செந்தாமரை போல் செவ்வாயில் சிரிப்பு
செந்தாழம்பூ போல் செம்மையான வாசம்
செண்பகபூ போல் மணக்கும் குணம்
செந்தூரபூ போல் தேனூறும் குரல்
செவ்வந்தி போல் மென்மையான இடை
செர்ரிபூ போல் வெண்ணிற பாதம்

14 comments:

க.பாலாசி said...

இது எல்லாம் சேர்ந்த மாதிரி ஒரு பொண்ணு எனக்கும் பாருங்களேன்... ரொம்ப நாளா ஒரு கல்யாணம்கூட பண்ணிக்கல....

நல்ல கவிதை நண்பரே... தொடர்ந்து எழுதுங்கள்....வாழ்த்துக்கள்....

Aathira mullai said...

எல்லாமே செம்மை. தங்களின் கவிதையும். தங்கள் மனம் போலவே... அருமை.. வாழ்த்துக்கள் வாசன்...

அண்ணாமலை..!! said...

நல்ல வர்ணனை வாசன்!
இத்தனை பூக்களை எங்கே தேடிப்பிடித்தீர்கள்!

Unknown said...

அழகிய வர்ணனை வாசன் தொடருங்கள்,
ஆனால் யார் அது என்று கடைசிவரைக்கும் சொல்லவே இல்லையே... ;)

S.M.சபீர் said...

ரொம்ப அழகான வரிகள் அருமை நண்பா தொடருங்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாஜி,

நானும் தான் தேடிக்கிட்டு இருக்கேன் எனக்கும்.

நீங்க பரவாயில்லை பாலாஜி ரொம்ப நாளா கல்யாணம் பண்ணாம இருக்கீங்க... நான் பாவம் ரொம்ப வருசமா இருக்கேன்... கிடைச்சா கண்டிப்பா சொல்லுறேன். எனக்கு கிடைக்காட்டியும் உங்களுக்காவது கிடைக்கட்டும்...

தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...

தொடர்ந்து தங்கள் ஆதரவு வேண்டி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

தங்களின் செங்கரும்பு போன்ற வரிக்கும் வெண்ணிற மனதின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

இன்னும் தேடி பார்க்கனும் விட்டுபோன மலர்களை பிடிக்க...

பூவாசம் போன்ற தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலன்,

அது எப்படி சொல்லுவோம்...
பப்ளிக்... பப்ளிக்... (நமக்குள்ள இருக்கட்டும்).

பூந்தேனை போன்ற தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

பூக்களை போன்ற தங்களின் வாழ்த்திற்கும், மனதிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Anonymous said...

செம்பருத்தி போல் செதுக்கிய முகம்...

மற்ற வருண்னைகள் அனைத்தும் செவ்வென பொருந்துகிறது...
செம்பருத்திப்போல செதுக்கிய முகம்... புரியல.. செதுக்கிய முகத்திற்க்கு வேறு வேறு உதாரணம் காட்டுவார்கள்..நீங்கள் எப்படி இப்படி வர்ணீத்திர்கள்...உங்க‌லின் அந்த உள்கருவை விளக்கலாமா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழா,

நான் ஏதோ வார்த்தையின் கோர்வைக்கு எழுதினேன்... என்னை இப்படி வம்புல மாட்டிவிட்டிங்களே... நியாயமா?

செம்பருத்தி பூவுல ஐந்து இதழ்கள் பொதுவா இருக்கும். அவை அழகிய கவரும் வண்ணத்துடனும் வடிவத்துடனும் சமசீராய் இருக்கும். மேலும் அந்த இதழ்கள் ஒன்றின் அடியில் ஒன்று சற்று மறைந்து இருக்கும் (திருகு இதழ் அமைப்பு என்பார்கள்).

என் பார்வையில்,
நெற்றி, கண், மூக்கு, கன்னம் & வாய் என ஐந்து பாகங்கள் என்னை கவரும் வகையில் நேர்த்தியாய் முகமாய் இருப்பதாகவும். அவைகளில் அடக்கம், அறிவு, ஆன்மிகம் , ஈர்ப்பு, காதல், காமம், வெட்கம் & சிரிப்பு என பலவிதமான உணர்வுகளும் மறைந்து இருப்பதாகவும்.

கவிதன் said...

வர்ணித்துக்கொண்டே போகிறீர்கள்..... அருமை !!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கவிதன்,

தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...