உயிரெழுத்துகள் மட்டுமல்ல தலைகீழாய்
உன்னால் ஆகிபோனேன் நானும்
தலைகீழாயானது குறையாய் அல்ல
தனிதிறமையாய் என்னுள் உன்னால்...
ஒளவையின் தமிழாய் நீ!!!
ஓங்கார நாதமாய் நீ!
ஒலிக்கும் ஓசையாய் நீ...
ஐம்புலனாய் நீ!
ஏக்கமும் ஏழிசையும் நீ!
எச்சமும் எழிலும் நீ..
ஊனமும் ஊக்கமும் நீ!
உள்ளமும் உறக்கமும் நீ - நுரை
ஈரலும் காற்றும் நீ!
இதயமும் இரத்தமும் நீ...
ஆழ்மனதும் ஆருயிராய் நீ!
அடிவயிறும் அனைத்துமாய் நீ...
வாழ்க தமிழ்... வளர்க தமிழ்...
14 comments:
அனைத்தும் நீ என்பதைப்போல்
சூப்பர் வாசன் அசத்துங்க..
நல்லாயிருக்குங்க
இந்த மாதிரி மெய்யெழுத்திலே ஏதாவது டிரை பண்றீங்களா?
அருமை
மெய்யெழுத்துடன் தமிழிற்கான கவிதை அருமை கீழிருந்து மேல் அமைந்தமை உங்கள் திறமையின் வெளிப்பாடு வாழ்த்துகள் வாசன்.
அன்புடன் மலிக்கா,
தங்களின் அசத்தலான வாழ்த்திற்கு மிக்க நன்றி...
அன்புள்ள வேலு,
தங்களின் அன்பான கருத்தை வேண்டுகோளாய் ஏற்று முயற்சி செய்யகிறேன்...
மிக்க நன்றி...
அன்புடள்ள திகழ்,
மிக்க நன்றி...
அன்புடள்ள பாலன்,
தங்களை போன்ற பல நல்ல உள்ளங்களின் ஊக்கமே காரணம் அல்லவா அதற்கு...
மிக்க நன்றி...
//அனைத்துமாய் நீ...
வாழ்க தமிழ்... வளர்க தமிழ்...//
வாழ்க வளர்க .....நீங்களும் .....!
அன்புள்ள கவிதன்,
நீங்களும் தமிழ்போல் வாழ்க வளர்க...
கவிதை இனிமை..
வெல்க தமிழ்!
அருமை வாசன்!
அன்புள்ள நிலா,
மிக்க நன்றி... வருகைக்கும் மற்றும் எண்ணத்திற்கும்..
அன்புள்ள அண்ணாமலை,
மிக்க நன்றி...
தமிழை வளர்ப்போம்...
நாமும் தமிழ்போல் வாழ்வோம்...
Post a Comment