Monday, June 28, 2010

உடற்பயிற்சி கூடம்...

மனிதா!
நாம் வியர்வை சிந்தி உழைக்காமல்
சம்பாதிக்கும் நிலை இன்று இருந்தாலும்
திங்களுக்கு கூலி கொடுத்து ஏதாவது
செய்து உடலை மேம்படுத்திட நினைத்து...
தினம் எப்படியாவது வியர்வை சிந்திட
உடற்பயிற்சி கூடம் செல்கின்றோம் - அங்கேயும்
விந்தையாய் நின்ற இடத்திலேயே நடக்கின்றோம்
வித்தையாய் நின்ற இடத்திலேயே ஓடுகின்றோம்
அதுவும் குளிர்சாதனம் பொருத்திய கூடதிலே!!!
இது ஏனோ? நமக்கு வீண்(ம்பு) தானோ?

4 comments:

க.பாலாசி said...

வீம்பேதாங்க... எல்லாமே செயற்கையோட இயைந்து வாழவேண்டிய சூழ்நிலையாயிடுச்சு... என்னப்பண்றது....

நல்ல கவிதை...

VELU.G said...

//
விந்தையாய் நின்ற இடத்திலேயே நடக்கின்றோம்
வித்தையாய் நின்ற இடத்திலேயே ஓடுகின்றோம்
அதுவும் குளிர்சாதனம் பொருத்திய கூடதிலே!!!
//

ஆம் வாசன் விந்தையாய் தான் இருக்கிறது

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாசி,

ஆமாம் நண்பரே... என்ன பண்ணுறது... கால தேவனின் வழியில் விதியென நாம்...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

மிக்க நன்றி...

விசித்திரமாகவும் இருக்குது...