அஞ்சுரூபாய் உனக்கு நான்கொடுத்தது
அழகென்று என்னை வர்ணிப்பதற்குஅல்ல
அசிங்கமாய் பேசிவிட கூடாதென்பதற்கு
தீண்டாமை என்னுள்ளத்தில் இல்லை - இருந்தாலும்
நீயென்னை தீண்டுவதை விரும்பாமலும்.
எந்தன் விழியிலும் மொழியிலும்
திருநங்கை நீயும் திருமங்கையாய்
மாறுவதாக சொன்னாய் வார்த்தையில்
கங்கையாய் என்னுள்ளமும் மாறியது - அந்நேரத்தில்
உன்னையும் என்தங்கையாய் மனமேற்றது.
8 comments:
திருநங்கைகள் பற்றின ஒரு வித்தியாசமான பார்வை. அருமை
நல்ல கவிதை
அன்புள்ள மணி,
மிக்க நன்றி...
இரயிலில் ஏற்பட்ட உண்மை அனுபவம் தான்....
அன்புள்ள வேலு,
மிக்க நன்றி...
இனிய வரவிற்கும் மற்றும் பின்னூட்டத்திற்கும்...
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அன்புள்ள அரசன்,
மிக்க நன்றி ...
தங்களின் இனிய வரவிற்கும் மற்றும் பாராட்டிற்கும்...
திருநங்கை என்றாலே கேலிச்சித்திரமாகவும் இழிவாகவும் பார்க்கும் இந்த சமூகத்தை என்னவென்று சொல்வது???
அவர்களுக்குள் உள்ள மனவேதனை பெரும்பாலும் யாராலும் அறியப்படுவதில்லை.
வித்தியாசமான பதிவு..
கடைசி வரியில் கலங்க வைத்துவிட்டீர்கள்.
அன்புள்ள இந்திரா,
மிக்க நன்றி...
தங்களின் கருத்து சரிதான்... அவர்களின் மனது யாருக்கும் புரிவதில்லை... இன்று புரிந்துக்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை என்ற நிலையில் பலர்...
Post a Comment