Tuesday, December 7, 2010

காலம் நம்மை மாற்றும்


பெண்ணே...
உன்னை சந்தித்த தருணங்களில்
விழியின் வழிபேசிய மொழியில்
உன்மனதை புரிந்துகொள்ளும் அவன்
இதழ்கள் உச்சரிக்கும் மொழியில்
பலநேரங்களில் முழுமையாக அவனுக்குள்
புரிந்துக்கொள்ள முடியாமல் திணறிபோகிறான்...

காரணம்?
நுனிநாக்கில் நீபேவது ஆங்கிலம்
அதனால் என்னவோ புரியவில்லை
என்றால்அது அலைபேசி வழியனுப்பிய
நகைச்சுவை குறுஞ்செய்தியாய் ஆகிவிடக்கூடும்...

ஆனால்!
செய்கைவழியும் செயல்வழியும் உந்தன்
உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் உணர்பவன்
உன்உள்ளத்தை புரிந்துக்கொள்ள முடியாமல்
உச்சரிக்கும் செந்தமிழிலும் குழம்பிபோகிறான்
உன்வாழ்வில் இனியில்லாமல் வாழபோகிறான்
தனக்குள்தானே தொலைத்து கொள்ள(ல்ல)போகிறான்

அதனால்!
கதிரவனைக் கண்ட பனிப்போல்
நடந்தவை எல்லாம் உன்னுள்
கண்ட கனவாய் அழிந்துபோகட்டும் - அவன்
நெஞ்சோடுமட்டும் நினைவாய் நிலைக்கட்டும்...

6 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையான அறிவுரைக்கவிதை யாரந்தப்பொண் நேரடியாகச்சொல்லிவிட்டீர்களா தோழா....

தினேஷ்குமார் said...

அருமையான வரிகள் தோழரே

அவள் உள்ளத்தை
அறிந்துகொள்ள
உலகத்தில்
படைக்கப்படா கருவி
படைக்கப்படட்டுமே
உம்மால் .............

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

மிக்க நன்றி நண்பரே...

தங்களின் இனிய பாராட்டிற்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தினேஷ்,

மிக்க நன்றி..

மனிதனின் மூளையில் நினைக்கும் எண்ணங்களை காட்டும் கருவி போல் உள்ளத்தை காட்டும் கருவியும் வரும்...

ஆனால் இந்நொடியில் மனதில் இருப்பது அடுத்த நொடி இல்லாமல் போய்விடுகிறது. அதனால்தான் இந்த குழப்பம்.

தனக்கு என்ன தேவை என்பதை தன்னால் வெளிசொல்ல முடியாத மனது பெண்களின் மனது... அதானல்தான் இன்னும் குழப்பம்...

Anonymous said...

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து.. (ஆனா நீங்க சுத்த்தமா வர்றதே இல்ல..)

அட.. கவிதை நாளுக்கு நாள் மெருகேருகிறதே..
கலக்குங்க வாசன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

வாங்க வாங்க அடிக்கடி இந்தபக்கம்...

நானும் வரேன் உங்கள் வீட்டுபக்கம்...


மிக்க நன்றி தங்களின் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும்...