Wednesday, December 15, 2010

அன்பு... காதல்.... (உரையாடல்)



ஒருநாள் சந்திக்காமல் பேசாமல் மறுநாள் காதலன் காதலி சந்தித்துக்கொள்கிறார்கள்.


என்னைநேற்று முழுவதுமாய் மறந்துவிட்டாய்
ஒருமுறைக்கூட என்னை நினைக்கவில்லையே
நினைத்திருந்தால் நான் உண்ணும்போது
ஒருமுறையேனும் புரையேறிக்ககூடும் உன்நினைவால் என்றான்...

ஒருவேளை நீஉண்ணும்போது நினைத்திருந்தால்
அப்படியேதும் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கலாம்
நான்தான் உன்னையே நினைத்திருந்தேனே
அதனால் என்னவோ நிகழாமல் என்றாள்...

அப்படியெனில் உனக்கு என்நினைவால்
மூன்றுவேளையும் நிகழ்ந்ததா என்றான்?
ஒற்றைச்சொல்லில் அவன்புருவம் உயர்ந்திட
இவளோ அப்படியொன்றும் ஏதுமில்லை என்றாள்...

உன்பிரிவால் நேற்று முமுவதும்
உணவே அருந்தவில்லை எனச்சொன்னாள்
தலைகுனிந்த நாண முகத்தோடு - இவனும்
தலைகுனிந்து நின்றான் வெட்கிபோன முகத்தோடு...

12 comments:

Anonymous said...

ஊடல் ஏற்பட்டதால் பேசாமலிருந்தார்களா? அல்லது வேலைப்பளுவினாலா?

கூடல் என்பதும் காதலில் சுகம் தான். அதேபோல் தன்மேல் பிழையில்லையென்று
ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பழி சொல்லிக்கொள்வதில் ஸ்வாரஸ்யம் தான்.
(அது அடுத்தவர் காதலாக இருக்கும்பட்சத்தில்)

arasan said...

நல்ல உணர்வு...
படம்தான் கொஞ்சம் அந்நிய படுத்துது...
நம்ம ஊரு படங்களையே போட்டிருக்கலாம் என்று தோணுது நண்பா...
பதிவு சிறக்க என் வாழ்த்துக்கள்

Anonymous said...

படத்தை மாற்றி விட்டீர்களா???
ஏன்??? நல்லா தானே இருந்தது???

arasan said...
This comment has been removed by the author.
arasan said...

நல்லா இருக்கு நண்பரே ... உங்க பதிவைபோலவே படமும்... அழகா இருக்கு...
தொடரட்டும் தங்களின் முத்தான பணி...
வாழ்த்துக்கள்..

arasan said...

//இந்திரா said...
படத்தை மாற்றி விட்டீர்களா???
ஏன்??? நல்லா தானே இருந்தது???//


படம் அன்னியப்படுது என்று நான் தான் சொன்னேன்...

தவறு என்றால் மனிக்கவும்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

ஊடலோ அல்லது வேலைபளுவோ தெரியாது... ஏதோ ஒர் காரணம்...

ஊடலுக்கு பின் கூடல் மகிழ்ச்சியான ஒன்று தானே...


மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தமிழ் ப்ளாக்,

மிக்க நன்றி...

தங்களின் அழைப்பில் மனம் மகிழ்ந்தேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி...

தங்களின் மேலான கருத்திற்கும், வாழ்த்திற்கும்...

படத்தை மாற்றி விட்டேன்...

தங்களின் ஊக்கமும் உற்சாகமும் மகிழ்சியை தருகிறது...

தவறு ஒன்றும் இல்லை... உங்களின் கருத்தில்... தோழி நம்மை மன்னிப்பார்...

கவிதை பற்றிய உங்களின் எவ்வித எண்ணங்களை இங்கே வெளிப்படையாக சொல்லலாம்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

//படத்தை மாற்றி விட்டீர்களா???
ஏன்??? நல்லா தானே இருந்தது???//

மன்னிக்கவும் படத்தினை மாற்றியதற்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி,

நலமா? நலமறிய ஆவல்...

arasan said...

நன்றி நண்பரே....