Friday, December 17, 2010

என்னை மயக்கிய நூலகமே...


நான் படித்துவிட்டு தூக்கிபோடும்
செய்தித்தாளகவோ சிறுகதை புத்தகமாகவோ
என்கையில் நீயில்லையடி பெண்ணே
சூடாக படித்துவிட்டு தூக்கியெறிய....

நான் கண்டெடுத்த நூலகம்நீ
என்றும்நான் உன்னுள் ஒன்றாய்
கலந்து இருக்க ஆசைப்பட்டுக்கொண்டு
என்னைநீ அறிந்துக்கொள்ளாமலா உன்வாழ்வில்...

நீநூலகம் என்றால் நான் நூல்களாய்
நீநூல்கள் என்றால் நான் பக்கங்களாய்
நீபக்கங்கள் என்றால் நான் எழுத்தாய்
நீஎழுத்து என்றால் நான் அதன்க(உ)ருவாய்

நூலகம் தேடிவாசல் வரைவந்தவன்
நூல்களை படித்துரசித்து சுவைத்திடதான்
ஏனோ சிறுதயக்கம் மனத்திற்குள் - நூலகத்திற்கே
புதுவாசகன் என்பதனாலோ இவன்வாழ்வில்...

6 comments:

தமிழ்த்தோட்டம் said...

நூலகம் கவிதை அருமை பாராட்டுக்கள்

arasan said...

அண்ணே பின்னிட்டிங்க ...

வார்த்தைகள் கோர்த்த விதம் அருமை...

அழகான கவி வரிகள் ...

வாழ்த்துக்கள் அண்ணே

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தமிழ்த்தோட்டம்,

மிக்க நன்றி...

தங்களின் இனிய பாராட்டிற்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி...

தம்பியின் வாழ்த்து மழையில் நனைந்து மகிழ்கிறேன்...

தொடர்ந்து தங்களின் ஊக்கத்தை வேண்டி...

Anonymous said...

சரி சரி..
உங்க நூலகத்த.. இல்ல இல்ல
உங்க நூல்கள.. இல்ல இல்ல
உங்க பக்கங்கள.. இல்ல இல்ல
உங்க எழுத்த..

அட ஏதோ ஒண்ண..
ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,


மிக்க நன்றி...

நலம் விசாரித்தமைக்கு...

கண்டிப்பா இத படிச்சாங்கனா உங்களிடம் நலம் சொல்வார்கள் விரைவில்...