கார்மேகமாய் வானம் சூழ்ந்திருக்க
வளி(ழி)யேதும் கண்ணில் தென்படாதிருக்க
மீண்டும் இதுபோல் வாழ்வில்
நிகழுமாயென ஏக்கத்துடன் நடக்கவைத்தது
இன்று இயற்கை தன்எழிலில்
என்னை மட்டுமல்லாது பலரையும்....
தொடர்ந்து என்தேகத்தில்
தோலின்மீது விழுந்து
இதயத்தின் உட்புகுந்து
என்னை மயக்கியது
பனிச்சாரலா? அல்லது
மழைத்தூறலா?
என்றுத்தெரியாத அளவிலான
ரம்மியமாய் வானிலை...
பூமி முழுவதுமாய்
நனைந்திருக்கவில்லை
மழைத்தூறல் என்பதற்கு
காணும்பொருட்களும் மரங்களும்
ஆகாயமும் நானும்
சாலையில் நனைந்ததால்
பனிச்சாரல் என்றும் - இயற்கையை
கூறிமுடியாமல் ரசிக்க வைத்தது...
7 comments:
அண்ணே அருமையான கவிநயத்துடன் அழகா எழுதி இருக்கின்றீர் ...
நல்லா இருக்கு அண்ணே
வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை நண்பரே...
தொடருங்கள்.....
பகிர்வுக்கு நன்றி
பதிவுகளை (கவிதைகளை) இண்ட்லி தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா நண்பரே?
இயற்கையை அழகாய் வர்ணிக்கும் கவிதை வரிகள்..
இன்றைய சூழலில் வாழ்க்கை ஓடும் ஓட்டத்தில் அதையெல்லாம் உணரக் கூட முடிவதில்லை..
அன்புள்ள அரசன்,
மிக்க நன்றி தம்பி...
ரொம்ப ஓவரா அண்ணனுக்கு பில்டப் கொடுக்கவில்லையே... அண்ணன் பாவம் பா...
அன்புள்ள மாணவன்,
மிக்க நன்றி நண்பரே...
தங்களின் பின்னூட்டத்தில் உளம் மகிழ்கிறேன்...
இண்ட்லி இணைக்கவில்லை... இண்ட்லி கணக்கு இருக்கு... ஆனால் உபயோகபடுத்துவது இல்லை...
மீண்டுமொரு நன்றி தங்களின் அன்பான வழிகாட்டலுக்கு...
அன்புள்ள இந்திரா,
மிக்க நன்றி...
சரியாக சொன்னீங்க... என்ன பண்ணுவது இயந்திர வாழ்வில் சிக்க தவித்துக்கொண்டு...
Post a Comment