பெண்ணே!!!
மேனியில் உடுத்தியிருந்த
ஆடையில் வரைந்தபூவும்
என்னை மயக்கவில்லை...
தலையில் சூடியிருந்த
கொடியில் மலர்ந்தபூவும்
என்னை மயக்கவில்லை...
முகத்தில் மலர்ந்திருந்த
உதட்டில் உதிராதபூவும்
என்னை மயக்கவில்லை...
தாவணிநுனியில் உனையறியாது
உரையாடும்போது பூப்போல்
தோற்றுவித்த கொசுவத்தில் - எனையறியாது
நான் மயங்கிபோனேன்...
14 comments:
அதுவும் முன்கொசுவமென்றால் கேட்கவாவேண்டும்.. எத்தனையோ பேரை மயக்கும் சக்தி அங்கேதான் பிறக்கிறது.. நல்ல கவிதை வாசன்.
படிக்கும்போதே காட்சி கண்முன் விரிகிறதே!
நன்று.
நல்ல கவிதை வாசன்.. வாழ்த்துக்கள்
தாவணிக்கு கொசுவம் இருக்குமா? சேலையில் தானே இருக்கும்?
அருமையான உணர்வு கவிதை அண்ணே ...
நிச்சயமா இந்த தருணத்தில் மயங்காத ஆனே இல்லை என்றுதான் சொல்லவேண்டும் ...
தூள் கெளப்புங்க ... வாழ்த்துக்கள்
கவிதை அருமை. ஈரோடு சங்கமத்திற்கு வருக வருக
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
தவறாமல் எழுதவும்.
அன்புள்ள பாலாசி,
மிக்க நன்றி...
கொசுவம் அமரும் இடம்... மிகவும் கூசும் பகுதி என்பதனாலா? எல்லாரையும் மயக்கிக்கொண்டு...
அன்புள்ள சென்னை பித்தன்,
மிக்க நன்றி...
தங்களின் இனிய முதலான வரவிற்கும் மற்றும் வாழ்த்திற்கும்...
தொடர்ந்து உங்கள் வரவை நாடி...
தாமதமான நன்றிக்கு மன்னிக்கவும்...
அன்புள்ள பிரஷா,
மிக்க நன்றி...
அன்புள்ள இந்திரா,
மிக்க நன்றி...
பழமொழி சொன்னா கேட்டுக்கனும், ஆராயக்கூடாது....
கவிதை படிச்சா ரசிக்கனும்... இப்படியெல்லாம் கேள்வி கேட்டு சிந்திக்க வைக்ககூடாது...
அன்புள்ள அரசன்,
மிக்க நன்றி....
தம்பி, உங்களை நேரில் பார்க்கிற அன்றுதான் இருக்கு.. எந்த அளவுக்கு மயங்கி போய் இருக்கிங்க.. யார்கிட்ட என்று கண்டுபிடிக்கிறோம்....
வாழ்த்துக்கு மீண்டும் ஓர் நன்றி...
அன்புள்ள தாமோதர் சந்துரு,
மிக்க நன்றி...
தங்களின் முதன்மையான வரவிற்கும் மற்றும் உளமார்ந்த அழைப்புக்கும்...
கண்டிப்பா வருகிறேன்.... சந்திப்போம்...
அன்புள்ள இந்திரா,
தங்களின் அழைப்பிற்கு என்மனமார்ந்த நன்றிகள்...
பதிவினை பதிவு செய்துள்ளேன்...
Post a Comment