Saturday, December 25, 2010

சுனாமியின் வேதனை (ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி)


கடலே!

ஆண்டுகள் ஆ(று)றாய்
ஓடி மறைந்திருந்தாலும்
உன்கரம் ஆகிய
அலைகளைபோல் ஓயாமல்...

உயிர்பிரிந்த சொந்தங்களின்
நினைவுகள் மனதிற்குள்
நெஞ்சில் இன்னும்
துயராய் நீங்காமல்...

பொறுமை கடலின்
பெரிது என்பார்கள்
நீயே
பொறுமையை இழந்தாயே...

உந்தன் வீட்டுக்குள்
எத்தனையோ முறை
உல்லாசமாய் சவாரி
செய்து இருக்கிறோம்

ஒரேயொரு முறைதான்
எங்கள்ஊருக்குள் பயணித்தாய்
அழையாமல் வந்தாய்
அலையோடு அடித்துசென்றாய்...

ஒருமுறை வந்துசென்றதே
நிறையானது எங்கள்மனது
குறையென்று மீண்டும்
வந்துவிடாதே எங்கள்வாழ்வில்...

சுனாமியால் இறந்தவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்....
உறவுகளை இழந்தவர்களுக்கு என் மனமார்ந்த ஆறுதல்கள்....

16 comments:

Anonymous said...

மனசு கனக்குற வலிகள் இன்னும் நெஞ்சில் ...
அருமையா வார்ப்பு

சென்னை பித்தன் said...

//ஒருமுறை வந்துசென்றதே
நிறையானது எங்கள்மனது
குறையென்று மீண்டும்
வந்துவிடாதே எங்கள்வாழ்வில்..//
போதும்,போதும்!அந்த ரணம் இன்னும் ஆறவில்லையே!
உங்களுடன் சேர்ந்து நானும் அஞ்சலி செலுத்துகிறேன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கல்பனா,


மிக்க நன்றி ....

தங்களின் இனிய முதல் வரவிற்கும் மற்றும் கருத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சென்னைபித்தன்,

மிக்க நன்றி...

தங்களின் ஆறுதலுக்கும்... அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்...

உங்கள் இயற்பெயர் சந்திரசேகரா? என தெரிந்துக்கொள்ளலாமா?

சிந்தையின் சிதறல்கள் said...

கலங்க வைத்து மனதில் நின்ற பேரளிவு

கவிதையில் நினைக்க முடிகிறது

அன்புடன் நான் said...

கவிதை வலியை சொல்கிறது..... அவர்களுக்கு எனது அஞ்சலியும்...



//ஒருமுறை வந்துசென்றதே
நிறையானது எங்கள்மனது//

இந்த வரி கொஞ்சம் நெருடலாக இருக்கிறதுங்க...

நீங்களே படித்து பார்த்து மாற்ற முடியுமாவென்று பாருங்கோ.

மற்றபடி உங்க உணர்வு... பாராட்டத்தக்கது.

சென்னை பித்தன் said...

தஞ்சை வாசன்,
நீங்கள் சொல்வது சரியே.ஆனால் ’ரன்’!

Anonymous said...

எத்தனை நாட்களானாலும் நினைத்தவுடன் மனதை கனக்க வைக்கும் நிகழ்வு.
இறந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

மிக்க நன்றி என் இனிய நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கருணாகரசு,

மிக்க நன்றி...

தங்களின் வரவிற்கும் மற்றும் பின்னூட்டத்திற்கும்...

உணர்வினை மதித்து பாராட்டியமைக்கும்...

நம்மால் மாற்ற இயலாது என்று இந்த உலகில் எதுவும் இல்லை... எல்லாவற்றிக்கும் நம் மனமே காரணம்...

// ஒருமுறை வந்துசென்றதே
கறையானது எங்கள்வாழ்வு
குறையென்று மீண்டும்
வந்துவிடாதே எங்கள்கனவிலும்...//

இப்படி மாற்றலாமா என்று சொல்லுங்கள்... மாற்றிவிடுகிறேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சந்திரசேகரன்,


மிக்க நன்றி...

பின்னூட்டத்தின் மறுமொழியை படித்து விட்டு தங்களின் பெயரினை எனக்கு அளித்தமைக்கு...

அவன் என்பதை விட அவர் என்பது சிறந்தது என்பதனாலா இவன் அப்படி சொல்ல மனமில்லாமல்...:)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

தங்களின் அஞ்சலியும் அவர்களின் ஆத்மாவை சாந்தியடைய செய்யட்டும்....

aranthairaja said...

ஆண்டுகள் ஆறானாலும் அதன்
ரணங்கள் இன்னும் ஆறவில்லை நண்பரே...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராஜா,

மிக்க நன்றி...

ஆறு ஆண்டுகள் அல்ல... நூறு ஆண்டுகள் ஆனாலும் அழியாது...

Anonymous said...

ஒருமுறை வந்துசென்றதே
நிறையானது எங்கள்மனது
குறையென்று மீண்டும்
வந்துவிடாதே எங்கள்வாழ்வில்///good seenu. nenjai thotta anjali varikal.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள உமா,

மிக்க நன்றி...

உங்களது ஊக்கத்திற்கு மிக்க மகிழ்ச்சி...