தண்ணீரில் மூழ்கும் ஓடம்போலே கண்ணீரில் மூழ்குகின்றேனே
வாழ்வின் நிகழ்வுகளால் ஆனந்த கண்ணீரில் சிலநாட்கள்
ஆனந்தமில்லா கண்ணீரில் இனிவரும் எல்லா நாட்களுமோ?
வெறுமையின் கொடுமையில் வாழும் இவ்வாழ்வு வீண்தானோ?
எனக்கு உயிர்கொடுத்த தாயே என்னுயிரை கொல்கின்றாயே
உன்வயிற்றில் நான்பிறந்திட செய்த கர்மம் என்னவோ?
பூர்ண ஜென்ம பாவமோ? எப்படிநான் தொலைப்பேனோ?
இந்தமானிடர் வாழ்பூமியில் என்வாழ்வு இனி தேவைதானோ?
சிறுசிறு வார்த்தைகளால் அடிக்கடி கொல்லும் தாயே
சிலதுளி விடம்கொடுத்து முழுதாய் கொல்லாமல் போகின்றாயே
பெற்றெடுத்த பாவத்திற்கு கொன்று புண்ணியம் தேடிக்கொள்வாயோ?
நரகத்திலாவது நீயில்லாமல் மகிழ்வாய் நான் வாழ்ந்திடுவேனே...
19 comments:
கவலை வேண்டாம் தோழா இனி பிறக்க இருப்பவை இன்பமான நாட்களே...
ஏன் நண்ப...ஏன்....இந்த வரிகள்...வார்த்தைகளில் ஏன் விசம்...படிப்பவனை பத்ரசெய்கிறது..தொடும் தூரத்தில் நீ இருந்தால்...தட்டி கொடுத்து புத்துயிர் கொடுக்கலாம்.இருப்பினும்...எனது வார்த்தைகளால் ஆசி வழங்குகிறேன்.
தாய் கூறும் சில வார்த்தைகள் நம் நிலை உணர்ந்துக்கூட விரக்தியில் இருக்கலாம்...
வாழப்பிறந்தவரே...நீவீர் நீடுழி வாழ்க...மனதின் கோட்டை நிரம்பி வழியட்டும்...விரும்பிய உறவுகளோடு...பொன்.
இவ்வருடம் இனிதாய் அமைய வாழ்த்துகள்
இக்கட்டான நிலைக்கு வருந்துகிறேன். நீர் மிகவும் நல்லவர் என்று அறிந்து கொள்க. தாயை எப்படியாவது உங்கள் முயற்சியால் சிரிக்க வைக்க முடியுமா என்று முயன்று பாருங்கள். அதில் நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுடைய உறவுகளில் திருப்பு முனையாய் அமையும் என நான் நினைக்கிறேன்
கவிதை நன்றாக உள்ளது
அன்புள்ள ஹாசிம்,
மிக்க நன்றி...
தங்களின் உற்சாகமான வரிகளுக்கு...
தங்களின் பின்னூட்டமே எனக்கு இன்பம்தான்...
நமக்கு நேரிடுவது ஏன் நேரிடுகிறது என்று மேலும் மேலும் வருந்தாமல்
எதனையும் சாதாரணமாக (டேக் இட் லைட்) எடுத்துக் கொள்வதில் தான் நம் சந்தோசம் இருக்கின்றது . உங்களுடைய திறமைகளை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் . அதில் மும்மரம்மாக செயல்படுங்கள்.
உங்களுடைய மின் அஞ்சல் கிட்டுமா? நானும் நிறைய எதிர்ப்புகளை சந்தித்து நிகழ்காலத்தில் நிம்மதியுடன்
வாழ்பவள்
அன்புள்ள பொன்,
மிக்க நன்றி...
பக்கத்திலிருந்து ஆறுதல் கூறமுடியாவிடினும்...
தூரத்திலிருந்து துயர் துடைக்க நினைக்கும் உங்கள் உள்ளத்திற்கு என்றும் நான் கடமைபட்டவன்...
தங்களின் ஆசியினால் கண்டிப்பாக என்மனத்தின் வேதனை கொஞ்சமாவது நீங்கும்...
அன்புள்ள கல்பனா,
மிக்க நன்றி...
தங்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...
அன்புள்ள மீனா,
மிக்க நன்றி...
கவிதைக்கும், என் உணர்வுக்கும் தாங்கள் அளித்த மதிப்பிற்கு...
srinihasasan@gmail.com இது என் மின்னஞ்சல் முகவரி...
migavum arumai.....
kavithaiyil un sogam than negizha vekirathu....
"ithuvum kadanthu pogum"
srinihasasan@gmail.com bounced. Is there a typo?
அன்புள்ள மீனா,
என்னை மிகவும் மன்னிக்கவும்...
srinihasan@gmail.com
இதுதான் சரியான முகவரி.... ஏதோ அவசரத்தில் பிழையாக அனுப்பிவிட்டேன் இப்பொழுதுதான் கவனித்தேன்...
தங்களுக்கு கொடுத்த சிரமத்திற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்...
அன்புள்ள ஸ்ரீதேவி,
மிக்க நன்றி...
என் சோகத்தை, சுகத்தை பேசி பகிர்ந்துக்கொள்ள நீயும் ஒருத்தி இருக்கிறாய் என்பதில் மகிழ்ச்சி...
மாற்றம் நிறைந்தது தான் வாழ்க்கை.. மாறும் என்ற உணர்வோடு நானும்...
தாய் என்ற இடத்தை பூர்த்தி செய்ய எந்த உறவாலும் முடியாது.அவர்கள் பலதரப்பட்ட எண்ணங்கள் முற்றுகை இடும்போதும்,தனிமையில் நிராதரவாக நிற்கும் நினைவு வரும்போதும்தான் தன் சொற்களால் சுடுவாள் அதுவும் சிறுது நேரம்தான் அதை பக்குவபட்ட நீதான் உணர்ந்து ஆறுதல் சொல்ல வேண்டும் அவர்களுக்கும் உன்னை தவிர ஆறுதல் கூற யார் இருக்கிறார்கள் உனக்காவது வெளிய நண்பர்கள் ,பணியில் முமுரம் சாட்டிங் என்று பொழுது போகும் தாய் இல்லாத நிலை கொடிய நரகம்தான் அது தாய் இல்லாதவர்களால் தான் உணரமுடியும் இந்த வயதில் உனக்கு நரகம் என்றால் அவர்கள் வயதை நிலைமையை நினைத்து பார் தெளிவு கிடைக்கும்
அன்பு வாசன்,
எந்தத் தாயும் மகனை வெறுப்பதில்லை; அவன் மீது துவேஷம் கொள்வதில்லை;சுடு சொற்கள் என்பவை அந்த நேரத்து வேதனையின் வெளிப்பாடுகள்தான். சுட்டவர்களும் வருந்துவார்கள்;வடு பட்டவர்களும் மறப்பார்கள்.அன்புதான் நிரந்தரம்!கவிதையின் நாயகன் யாராயினும் அவருக்கு இதுவே என் ஆறுதல்.நல்லதே நடக்கும்.
அம்மா கோவத்தில் பேசும் வார்த்தைகளை பெரிதாக கருத வேண்டாம்..
உங்களுக்கு ஏதேனும் துயர் என்றால் உங்களை விட அதிகமாக வலிப்பது உங்கள் தாய்க்குத் தான்..
அனைத்து துன்பங்களும் விரைவில் தீர என் பிராத்தனைகள்..
துயரை சொன்னதும் துடைக்க இத்தனை விரல்கள் துயரமே துன்புறுத்தியது போதும் துடைத்துவிடு... வெளிய வாங்க துயரத்திலிருந்துன்னு உங்களுக்கு சொல்லும் முன் நான் வர முயற்சிக்கிறேன் வாசன்..
உங்கள் கவிதை நடை நல்லா இருக்கிறது. ஆனால் அர்த்தமற்ற கவிதை யாக இருக்கிறது. எப்பொழுதும் தாயே வெறுகாதிர்கள்...அவர்கள் என்ன சொல்லி இருந்தாலும் அது கண்டிப்பாக விசமாக இருக்காது. உங்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும்.
மனதை மிகவும் நெகிழ வைக்கிறது உங்கள் வரிகள் தோழரே ! மனதில் சுமை இருந்தால் அனுப்பி வையுங்கள் இந்த தோழி இருக்கிறேன் உங்கள் சுமைகளை பகிர்ந்து கொள்ளவது மட்டும் அல்ல உங்கள் துன்பங்களை நான் என்னிடம் வைத்து உங்களுக்கு மகிழ்ச்சி மட்டுமே அளிப்பதற்கு ! எந்நாளும் உங்கள் வாழ்வில் சிரிப்பும் மகிழ்ச்சியும் மட்டுமே நிறைய வேண்டும் இந்த தோழியின் உயிர் உள்ள வரை !
Post a Comment