Friday, January 21, 2011

நலம்வாழ எந்நாளும் என்வாழ்த்துகள்....



உடல்நிலை சரியில்லாமலா?
உன்தேகம் நாட்கணக்கில்
கொதித்துக்கொண்டு நானறியேன்...
உன்நிலைகேட்டு என்னுடலில்
என்உதிரம் கொதிக்குதடி - என்னுள்ளத்தின்
அன்பினை நீயறிவாயோ?

நோய்தீர்க்கும் மருத்துவனாய்
நல்மருந்தாய் நானிருந்தால்
உன்னைகாண ஓடோடி
வந்திருப்பேன் இந்நேரம்
நோய்தரும் கிருமியாய் - நானிருப்பேன்
என்பதனாலோ காணவிரும்பாமல்...

11 comments:

Anonymous said...

கவிதை அருமையாக உள்ளது...

(உள்ளேன் ஐயா..!!)

Anonymous said...

//உன்நிலைகேட்டு என்னுடலில்
என்உதிரம் கொதிக்குதடி//

ப்ரஸர் செக் பண்ணுங்க பாஸ்..

Anonymous said...

//என்னுள்ளத்தின்
அன்பினை நீயறிவாயோ?//


அந்தம்மா கிட்ட அருவாமனை இல்ல போல.. (அறியிறதுக்கு)

Anonymous said...

//நோய்தீர்க்கும் மருத்துவனாய்
நல்மருந்தாய் நானிருந்தால்
உன்னைகாண ஓடோடி
வந்திருப்பேன் இந்நேரம்//


இது தானே வேணாங்குறது..
பஸ்க்கு காசில்லனு வெளிப்படையா சொல்ல வேண்டியது தானே..

Anonymous said...

//நோய்தரும் கிருமியாய் - நானிருப்பேன்
என்பதனாலோ காணவிரும்பாமல்...//


சரி சரி அழுகாதீங்க.. அவங்க நம்பர் குடுங்க. நா வேணும்னா சிபாரிசு பண்றேன்.

சென்னை பித்தன் said...

நோய்க்குக் காரணம் மட்டுமல்ல; நோய்க்கு மருந்தும் நீங்கள்தானே!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

சிறிது நாட்களுக்கு பிறகு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து இட்டமைக்கு...

உங்களை மாதிரி என்னால் ஒவ்வொரு வரிக்கும் பின்னூட்டம் போட முடியாது...

நான் எஸ்கேப் ஆகிவிடுறேன்....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சந்திரா,


மிக்க நன்றி...

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

சிந்தையின் சிதறல்கள் said...

யாரென்று சொல்லாமலே இத்தனை பாசமான அந்த உறவுக்கு வாழ்த்துகள்
இந்த அன்பு உள்ளம் அடைந்ததற்கு...

ஆர்வா said...

சீக்கிரம் ஒரு முத்த.. சாரி.. சாரி... சித்த வைத்தியம் கொடுங்க..

VELU.G said...

//நோய்தரும் கிருமியாய் - நானிருப்பேன்
என்பதனாலோ காணவிரும்பாமல்...
//

சுயபச்சாதாபமே வேண்டாம் தைரியமாய் போய் பாருங்கள்

நல்ல கவிதை நண்பரே