Thursday, January 13, 2011

முத்தே என் முத்தாரமே...


பெண்ணே நீயுமென்ன கடலா?
உன்னிரு கண்களென்ன முத்துசிப்பியா?
உன்கண்ணீர் துளிகளென்ன முத்தா?
உன்கன்னத்தில் விழுந்து தெரித்துக்கொண்டு - அதற்கு
என்அன்பினை தவிரவிலை இல்லையோ?.

முத்தாய் மாறிவிட காரணமென்னவோ?
முத்துசிப்பியில் துகளாய்புகுந்தது நானோ?
உன்னிதயத்தை அரித்துகொண்டு நீயறியாமலே
என்நினைவுகள் பன்மடங்காய் பெருகிகொண்டு - உன்மனதை
வன்மையாய் இறுகிவிட செய்துகொண்டோ?

என்னைநீ காணும் சமயத்திலும்
உன்னைநான் பிரியும் தருணத்திலும்
உன்னையறியாமல் ஆனந்தத்திலும் அழுகையிலும்
உன்னுடலுக்குள் உதிரமும் உருகிகொண்டோ? - மண்ணில்
உன்கண்ணீரை முத்தாய் சிந்திக்கொண்டோ?

நன்றி: வரிகளை எழுத தூண்டிய என் இனிய நண்பர் சாய் அவர்களுக்கு...

10 comments:

Unknown said...

உன்னிதயத்தை அரித்துகொண்டு நீயறியாமலே
என்நினைவுகள் பன்மடங்காய் பெருகிகொண்டு - உன்மனதை
வன்மையாய் இறுகிவிட செய்துகொண்டோ?////

அருமை அருமை..

VELU.G said...

உணர்வுள்ள வரிகள்

கவிதை அருமை நண்பரே

Anonymous said...

கவிதை நல்லாயிருக்கு.

இப்ப பாராட்ட யாருக்கு சொல்றது?? உங்களுக்கா?? உங்கள எழுத தூண்டிய உங்கள் நண்பர் சாய்க்கா???

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஜெ.ஜெ,

மிக்க நன்றி...

என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

மிக்க நன்றி...

நீண்ட நாள்களுக்கு பிறகு இனிய வருகை...

நலமா?

என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

பாராட்டா முக்கியம்.... யாருக்கு கிடைத்தால் என்ன? உங்கள் பின்னூட்டம் தான் முக்கியம்...

என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்...

சென்னை பித்தன் said...

முத்து முத்தாய் எழுதியிருக்கிறீர்கள்!
இனிய பொங்கல் வாழ்த்துகள்!

Unknown said...

பொங்கல் வாழ்த்துக்கள் சகோ..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சந்திரா,

மிக்க நன்றி...

மூன்றுவரிகளில் முத்தாய் வாழ்த்துடன் கூடிய பின்னூட்டத்திற்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஜெ.ஜெ,

மிக்க நன்றி சகோ....


என் தாமதமான நல்வாழ்த்துகள்...