Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்..


கட்டுகட்டாய் கரும்பு
அப்பா வாங்கிவர
துண்டு துண்டாய்
அம்மா வெட்டித்தர
மெல்ல மெல்ல
மென்று கடித்து
இன்பம் இன்பமாய்
நண்பர்களோடும் ஒன்றுகூடி
வெட்டிகதை பேசிக்கொண்டே
சுவைக்க சுவைக்க
உண்டகாலம் இன்று
எங்கோ போனதே...

புத்தம்புது மண்பானை
கடைதன்னில் வாங்கிவந்து
மஞ்சள்கொத்து கழுத்தில்கட்டி
திருநீரும் குங்குமமும்
உடல்முழுதும் பூசிவிட்டு
இல்லத்தின் முன்முற்றத்தில்
உறவினர்கள் சேர்ந்திருக்க
கதிரவனை காலத்தோடு
காண அழைத்து
புத்தரிசியும் வெல்லமும்
பாலும் ஒன்றாய்கலந்து
அடுப்பினில் பொங்கிடவே
வழிந்திடும் நேரத்தினிலே
ஓங்கும் மணியோசை
ஒருபுறம் ஒலித்திடவே
கூடியிருந்த கூட்டமும்
ஒன்றாய் மகிழ்வுடனே
பொங்கலோ பொங்கலென்று
குரலிட்ட காலமும்
எங்கோ போனதே...

நம்மை தாங்கும்
மண்ணிற்கும்
நாம் உண்ணும்
உணவிற்கும்
அதனை விளைவிக்கும்
உழவருக்கும்
உற்ற துணையிருக்கும்
உயிர்களுக்கும்
இருள்நீக்கி ஒளிதரும்
பகலவனுக்கும்
நன்றி சொல்லிடும்
நாட்களும்
உருமாறி எங்கோ
போனதே...

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
வாழ்வில் தவிர்க்க
முடியாத ஒன்றாய்...
ஒன்றாய்கூடி பலநாள்
கொண்டாடி மகிழும்
திருநாட்களும் பண்டிகைகளும்
எங்கோ போனதே...


பொங்கல் திருநாளில்
பயன்படுத்தும்
ஒவ்வொரு பொருளும்
நம்வாழ்விற்கு
சொல்லித்தரும் தத்துவங்கள்
ஏராளமிருக்க
எல்லாமே மறைந்தும்
மறந்தும்
நம்மைவிட்டு எங்கோ
போனதே...

மீண்டு(ம்)தான் அந்தநாட்கள்
வாழ்வில் வருமோ?
அருகினில் அல்லாது
தொலைவினில் இருந்தாலும்
வாழ்த்திடும் நம்நெஞ்சம்
எதிர்கால சந்ததிகளின்
வாழ்வுவரை தொடர்ந்திடுமோ?
இன்னும்பல ஏக்கங்கள்
ஒருபுறம் இருந்தாலும்


கரும்பின் இன்சுவைபோல் வாழ்வு இனிக்கட்டும்
பொங்கும் பொங்கலைபோல் வாழ்வு சிறக்கட்டும்
ஆதவனின் ஒளிப்போல் வாழ்வு பிரகாசிக்கட்டும்
விளைந்திடும் நிலம்போல் வாழ்வு செழிக்கட்டும்
எல்லார் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்
இன்றுமட்டுமல்லாது என்றும் ஒன்றாய் வாழ்ந்திடுவோம்...



(அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்)

16 comments:

மாணவன் said...

பொங்கல் கவிதை அருமை

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்தின நல்வாழ்த்துக்கள்

சிந்தையின் சிதறல்கள் said...

பொங்கல்கவிதை அருமை கவிதையில் பொங்கிவிட்டீர்கள்

இனிய வாழ்த்துகள் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

தோழி said...

"இதயம் நிறைந்த தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்".

இந்த நன்னாளில் உங்களின் அகமும் புறமும் மலர்ந்து சிறந்திட வாழ்த்துகிறேன்.

அண்ணாமலை..!! said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
____/\____

Unknown said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மாணவன்,

மிக்க நன்றி...

தங்களின் வரவிற்கும் மற்றும் இனிய வாழ்த்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

மிக்க நன்றி...

எல்லாம் கதிரவனாய் நீங்கள் என்னோடு இருக்கும் உற்சாகம் தான்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழி,

மிக்க நன்றி...


தங்களின் வரவிற்கும் மற்றும் இனிய வாழ்த்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

மிக்க நன்றி...


தங்களின் வரவே மிக்க மகிழ்ச்சியாய்... நீண்ட நாட்களுக்கான பின் ஓர் பின்னூட்டம் மனதிற்கு மேலும் மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இனியவன்,

மிக்க நன்றி...

தங்களின் வரவிற்கும் மற்றும் இனிய வாழ்த்திற்கும்...

நாவலந்தீவு said...

சற்றொரு நிமிடம் திரும்பி பார்த்தேன், என் சிறு வயதின் பொங்கல் விழா சிறப்பினை. தற்போது மௌனமாய் ....

Anonymous said...

nice ponggal kavithai

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முத்தரசு,

மிக்க நன்றி...

சிறுவயது நினைவுகள் எல்லாம் மெளனங்களாய்... பேசினாலும் அவை கட்டுகதைகளாய் இன்று...

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள Anonymous.


மிக்க நன்றி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பொங்கல் கவிதை அருமை...
பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழி பிரஷா,

மிக்க நன்றி...

தங்களின் இனிய மறுமொழிக்கும் மற்றும் பொங்கல் நல்வாழ்த்திற்கும்...

என்னுடைய இனிய நல்வாழ்த்துகள் தங்களுக்கு...