ஆதியை பகலில் கண்டாலும் உன்ஞாபகம்
மதியை இரவில் கண்டாலும் உன்ஞாபகம்
ஆதிபராசக்தி அம்மனை கண்டாலும் உன்ஞாபகம்
ஆதிதாளத்தில் இசையை கேட்டாலும் உன்ஞாபகம்...
எங்கும் தமிழெழுத்தை கண்டாலும் உன்ஞாபகம்
எந்த(ன்) வலைப்பக்கத்தை கண்டாலும் உன்ஞாபகம்
எதை எழுதிடசற்று நினைத்தாலும் உன்ஞாபகம்
எதையும் எழுதகூடாதென நினைத்தாலும் உன்ஞாபகம்...
அன்பென்ற சொல் கேட்டாலும் உன்ஞாபகம்
அன்போடு யார் பேசினாலும் உன்ஞாபகம்
அன்பாய் உனைநான் நினைத்ததும் ஞாபகம் - எனைநான்
அன்பென்ற ஓர்வார்த்தையில் மறந்ததும் ஞாபகமே..
... ஞாபகங்கள் தொடரும்
6 comments:
உண்மைதான் அண்ணே ... அவங்களின் சிந்தனை இல்லை என்றால் அப்புறம் எப்படி ...
நல்லா இருக்குங்க அண்ணே
எதை எழுதிடசற்று நினைத்தாலும் உன்ஞாபகம்
எதையும் எழுதகூடாதென நினைத்தாலும் உன்ஞாபகம்...///
அருமையான வரிகள்...
நல்ல ஞாபகங்கள்!
அன்புள்ள அரசன்,
மிக்க நன்றி...
உண்மையை சொல்லுறீங்க... ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்...
அன்புள்ள ஜெ.ஜெ,
மிக்க நன்றி...
என்ன செய்வது காலத்தின் கோலம்... அதன் வழியே நான்...
அன்புள்ள சந்திரா,
மிக்க நன்றி...
Post a Comment