Wednesday, June 2, 2010

பள்ளிக்கூடம்

நம்மின் நெஞ்சுக்குள்
எத்தனையோ நினைவுகளை
பட்டாம்பூச்சியாய் சிறக்கடிக்க
செய்யும் மந்திரசொல்தான்...

பச்சை நிற வயல்வெளிகளும்
கூறுப்போட்ட பூமியாய் மாறியிருந்தாலும்
பசுமை மாறா எண்ணங்களாய்
சோறுட்டிய தாய்போல மனதிற்குள்...

மறக்கவே நினைத்தாலும்
மறக்க முடியாதபடி
மனதில் அலைபாயும்
மகிழ்ச்சி தந்த
மெளனம் கலந்த - எத்தனையோ
மங்காத சம்பவங்கள்...

மைதானங்கள் வெறிச்சோடிட
வகுப்பறைகள் நிரம்பிட
மீண்டும் ஒர்ஜென்மயாய்
ஒன்றுகூடிட சங்கமிக்கும்
ஒருநாளாய் விடுமுறைக்கு பின்
மீண்டும் பூக்கும் வகுப்பா(பூவா)ய்...

பள்ளிக்கூடம் என்ற தலைப்பினை
கொண்டு எழுதிட எத்தனையோ
பக்கங்கள் பத்தாமல் போகின்றன
எதைவிடுவது எழுதுவது என்றுதெரியாமல்
தவிக்கின்றது என்மனம் இன்று...
ஆனால்,
பள்ளிக்கூடத்தில் கொடுக்கப்பட்ட
பலதலைப்புகளுக்கு என்ன எழுதுவதென்று
தெரியாமல் வெள்ளைகாகிதங்கள்
பத்திரமாக தவித்தன அன்று...

4 comments:

வைகறை நிலா said...

அழகான கவிதை..

//மறக்கவே நினைத்தாலும்
மறக்க முடியாதபடி
மனதில் அலைபாயும்
மகிழ்ச்சி தந்த
மெளனம் கலந்த - எத்தனையோ
மங்காத சம்பவங்கள்...//

அழகான வரிகள்..

அண்ணாமலை..!! said...

ஹஹ்ஹ.. உண்மைதான்!
இம்புட்டு கற்பனை அப்ப இருந்திருந்தா
இந்நேரம் எம்.பி.பி.ஏஸ்-ஏ முடிச்சிருக்கலாம்!

கடைசி வரிகள் மிகப்பிடித்தன!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

தங்களின் அழகான வரிகளும் நிலவினை போல்...


மிக்க நன்றி...தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

தாங்கள் ரசித்து படித்து மறுமொழி இட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி...

மிக்க நன்றி...