இக்கால கட்டத்தில்
இச்சிறிய வயதில்
சுயபிரசவம்…
பூவாய் அரும்பிய சிறுமியே
நீயாய் விரும்பியோ? விரும்பாமலோ
சூ(கூ)டி அனுபவித்து வாடியின்று
மொட்டு ஒன்றை அரும்பினாய்…
மொட்டுகள் பூவாகி விதையாகி
மீண்டும் மொட்டாவது இயல்பு - ஆனால்
மொட்டே மற்றொரு மொட்டை
பெற்றெடுத்த மளைப்பான நிகழ்வு…
உடலுறவு பற்றி தெரியாதோ? - உன் அறியாமை
மற்றவர்களிடம் சொல்லமுடியாத நிலையோ? - உன் இயலாமை
பத்துமாதம் ரகசியமாய் சுமந்தாய் - உன் தனித்திறமை
பெற்றெடுத்த செயல்முறை சரியோ? - உன் கல்லாமை
பிரபஞ்சத்தை வியக்க வைத்ததடி! - உன் பெண்மை
இனியென்ன செய்வதென்று நிற்பது – உன் நிலைமை
உனக்குள் ஒளிந்துக்கொண்டு எத்தனையோ ஆமை
படித்தபோது உன்மேல் எனக்குள்ளும் பொருமை
பிள்ளைபேறு மறுபிறப்பென்று எண்ணி
பிள்ளைபெறுதலை தள்ளி வைக்கும்
இன்றைய பெண்களிடையே வேறுபட்டும்
மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை வேண்டும்
மங்கையர்களிடையே தானே பள்ளிக்கூடத்தில்
பிரசவித்துக்கொண்டு பொருட்படுத்தாமல் இருந்தும்
அவர்கள் எல்லோருக்கும் பாடம்புகுத்தும்
கட்டாய பா(ப)டமாய் எங்கள் கண்முன் நீ...
அன்று…
பன்னிரெண்டு வயது சிறுமி
தாயானாள் உலகமே வியந்தது
இன்று …
பதினைந்து வயது சிறுமி
தனக்கு தானே பிரசவம்!!!
இந்தியாவை நினைத்து உலகமே
வியந்து கொண்டு உன்னால்.
15 comments:
கவிதை நடை நன்றாக இருக்கிறது.
இந்தியாவின் பண்பாடு
இப்படிப் பண் பாடுகிறதே!!!!
அதுவும் செந்தமிழ்நாட்டில்!!
நல்ல வரிகள் வாசன்!
காலக் கொடுமை... இப்படியும் ஒரு வழியில் அழிகிறது நாடு... உங்களின் கவிதையின் வரிகள் அருமை..
வணக்கம் வாசன்
எல்லாம் சரி ஆனால் பிறந்த குழந்தையில் தந்தை யார் என மூச்சே விட வில்லையே.
அனேகமாய் அந்த குழந்தையின் தந்தை அவள் வீட்டிலேயே இருக்கக்கூடும்.
அன்புள்ள ரமேஷ்,
மிக்க நன்றி நண்பரே...
அன்புள்ள அண்ணாமலை,
ஒருபுறம் மனம் புண்படுகின்றது...
மறுபுறம் மனம் பண் பாடவைக்கின்றது.
மிக்க நன்றி...
அன்புள்ள புஷ்பா,
இதுதான் கலி காலமோ?
மிக்க மகிழ்ச்சி தோழி...
அன்புள்ள இராஜராஜன்,
வணக்கம்...
குழந்தை பெற்ற மாணவி, குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. ஏற்கனவே இருமுறை கருக்கலைப்பு செய்துள்ளார்.
http://narumugai.com/?p=4417
இந்த விசயம், முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை மாதிரி ஆகிவிட்டது...
உங்கள் கேள்விகளுக்கான விடைகள் எப்பொழுதாவது, எப்படியாவது வெளிவரும்... வரும்வரை காத்திருப்போம்...
பார்வைக்கும் மற்றும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...
ஆமாம் உங்கள் வனத்தில் புதிய பூக்களோ / மரமோ தோன்றாமல் போனது ஏனோ?
விவரம் அறியாப் பெண்ணின் கர்ப்பத்தை, பிள்ளைப்பேற்றை வீண் வம்பாக்கி ஒருதலையாய் பெண்ணை மட்டும் வையும் உலகில் அவள் வலியை ஒரு சில வரிகளால் உணர்த்திய உண்மைக் கவிஞன் நீ. பெண்ணீன் உணர்வை மதிக்க்கும் பெண்மைக் கவிஞனும் நீ! வாழ்க உன் கவித்திறம்..
அன்புள்ள ஆதிரா,
என்னின் எல்லா புகழுக்கும் செயலுக்கும் தங்களை போன்றவர்களின் நட்பும் உறவும் தான்...
மிக்க நன்றி...
சீனிவாசன்,
அற்புதமான வரிகள் ....
மிக்க நன்றி...
தொடரட்டும் உங்கள் கவிதை மழை... காத்திருக்கிறோம் உங்கள் வரிகளுக்காக ....
உங்கள்,
கார்த்திக்
அன்புள்ள கார்த்தி,
தங்களின் வருகைக்கும் மற்றும் பாராட்டிற்கும்...
தங்களின் ஆதரவினை தொடர்ந்து உங்களிடமிருந்து நாடி...
மிக்க நன்றி...
U are Great..Vasan..
ஆணாதிக்க சமூகத்தில் பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறந்த கவிஞர் நீங்கள்.
ஒரு வீட்டில் மருமகள் கர்ப்பிணியாகயிருக்கும் பொழுது எவ்வளவு கவனித்து கொல்கிறார்கள்..
டெலிவரி நேரத்தில் எல்லா உறவினரும் மருத்துவமனையில் கூடிவிடுகிறார்கள்..
ஆனால் இந்த பெண்ணின் சூழ்நிலை..இப்படி ஒரு துன்பம் எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது..
இந்த சிறுமியின் எதிர்காலம்..???
அன்புள்ள நிலா,
மிக்க மகிழ்ச்சி...
பெண்களை மட்டும் குறை கூறியே ஆண்கள் எக்காலமும் வாழமுடியாது. தவறுகள் இழைக்கப்பட தாமும் அதற்கு காரணம் என்பதனை அறிந்து அனைவரும் செயல்படவேண்டும்.
இந்நிகழ்வு பல உண்மைகளை உள்ளடக்கி சர்சைக்கு இருந்தாலும்...
படித்த அப்பொழுதில் மனதின் நிலை பதறிபோனது இயற்கையாய்...
இதுபோன்ற சூழல் உண்மையில் எந்த பெண்ணுக்கும் வரவே கூடாது...
சிறுமியின் எதிர்காலம் ஒரு கேள்விகுறிதான்...இருந்தாலும் பணம் எதையும் செய்யும்...
நன்றி நிலா...
கால மாற்றம் என்பது இது தானோ...
Post a Comment