கழுத்தில் மணி கட்டி
மூக்கில் கயிறு பூட்டி
துள்ளி நடை போட்டிட
ஓசை தரும் இசையும்
வண்டியின் சக்கரத்தில் அச்சாணியின்
நுனியில் பூத்த மணியும்
குலுங்கி சாலையில் வலம்வர
இசைக்கு தாளமாய் சேர்ந்திட
மெல்ல சுழலும் சக்கரமாய்
வாழ்கை சக்கரம் மென்மையாய்
சுழன்ற காலம் எங்கோ?
உதிரி பாகம் இல்லாமலும்
உடைந்த பாகம் இணையாமலும்
உ(அ)திரும்படி வேகமாய் ஓட்டிட
உளைச்சல் தரும் இரைச்சலும்
பாதையில் வழிவேண்டி எழுப்பும்
ஒலியும் செவியினை பிளந்திட
உருண்டு ஓடும் சக்கரமாய்
விரைந்து ஓடும் வாழ்வாய்
இயந்திர வாழ்கையாய் மாறியதேனோ?
9 comments:
வாழ்க்கை இயந்திரமாகத் தான் போய்விட்டது வாசன்
அருமையாக வந்திருக்கிறது கவிதை
அன்புள்ள வேலு,
மிக்க நன்றி...
/நுனியில் பூத்த மணியும்
குலுங்கி சாலையில் வலம்வர
இசைக்கு தாளமாய் சேர்ந்திட//
அழகான் அமைப்பு..
எப்படி வாசன் இப்படியெல்லாம் சிந்தனை தோன்றுகிறது. படித்தவுடன் மெய்சிலிர்த்தேன்.. அருமையான கவிதையும், கருத்தும், படமும்.. வாழ்த்துக்கள் மேலும்,....
interesting blog, i will visit ur blog very often, hope u go for this website to increase visitor.Happy Blogging!!!234
வாசன்..
ரொம்பவே அருமையான கவிதை!
தேடினாலும் திரும்பக் கிடைக்காதது!!!!!!!
வார்த்தை மணிபோலக்
கோத்துக் கிடக்கிறது
இந்தக் கவிதையில்!!
அன்புள்ள ஆதிரா,
மிக்க நன்றி தங்களின் உணர்வுகளையும் இங்கே பகிர்ந்துக்கொண்டமைக்கு...
சிந்தனை எல்லாம் தானா வருது...
Dear Maria,
Thanks for visiting my blog...
அன்புள்ள அண்ணாமலை,
வாழ்க்கை மாறிவிட்டது ...
மனிதனும் மாறிவிட்டான்...
அந்த மணியின் ஒலி போல உங்களின் வரிகள் எனக்கு...
மிக்க நன்றி...
Post a Comment