Wednesday, June 2, 2010

பள்ளிக்கூடமா? சிறைக்கூடமா?

பலருக்கு இது பூந்தோட்டந்தான்!!!
சிலருக்கு அது சிறைச்சாலைதான்!!!
பூக்கின்ற பூக்கள் பலவிதம்போல்
சிறைப்பட்ட கைதிகளும் பலவிதம்.

வகுப்பறையென்னும் பூங்கா
எப்பொழுது திறக்கும்
பாடமென்னும் தென்றல்
எப்பொழுது வீசுமென்று
காத்திருக்கும் காதலர்களாய்
மாணாக்கர் ஒருபுறமும்...

வகுப்பறையென்னும் சிறை
எப்பொழுது முடியும்
மைதானமென்னும் விடுதலை
எப்பொழுது செல்வோமென்று
காத்திருக்கும் சிறைகைதிகளாய்
மாணாக்கர் ஒருபுறமும்...

பள்ளிக்கூட ஒழுக்கத்தை
நிலைநாட்டும் பெயரில்
சிறைக்காவலர் போல்
செயல்படும் ஆசிரியர்களை
கண்டுபயந்து ஒதுங்கும்
மாணாக்கர் ஒருபுறம்...

அன்றோ...
பள்ளிபயிலும் மாணாக்கரிடையே
ஒற்றுமையுணர்வு ஓங்கிட
வெண்ணிற மேல்சட்டையும்
சீருடையாய் அணிந்தனரே.
கம்பியெண்ணும் கைதிகளிடையே
வேற்றுமையுணர்வு நீங்கிட
கட்டம்போட்ட உடையையும்
தண்டனையாய் அணிவித்தனரே.

இன்றோ...
பள்ளிபயிலும் மாணாக்கர்
கட்டம்போட்ட சீருடையும்
கைதிகள் வெண்ணிற
உடைகளை அணிந்துக்கொண்டும்
தலைகீழாய் மாறிபோனதே
பள்ளிக்கூட வாழ்க்கை.

அங்கும் சீருடை
இங்கும் சீருடை
ஒற்றுமையால் என்னவோ
பள்ளிக்கூடம் இங்கே
பூந்தோட்டமாய் சிறைச்சாலையாய்
என் கண்களில் தெரிந்ததோ?

விடுதலையோ விடுமுறையோ
ஆனபிறகு மீண்டும்
அதேஅறையை அடைய
முடியாத காரணத்தினாலோ என்னவோ?

உண்மையான சிறைச்சாலைகளும் இன்று
பூந்தோட்டமயமாய் அழகாய் மாறிவர
பாடசாலைகளும் சிலயிடங்களில் இன்று
தண்டனைவழங்கும் சிறைச்சாலைகளாக மாறி
மாணாக்கரின் உயிரைபறிக்கும் இடமாக
மாறிக்கொண்டு இந்நிலை மாறவேண்டி...

2 comments:

அண்ணாமலை..!! said...

அதுதானே !
கோடுபோட்ட உடையை விட
வெள்ளை அல்லது கோடுபோடாத தூய உடைகளே சிறப்பானவை!
இதுக்கு என் ஓட்டும் !!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

தங்களின் கருத்தினை நான் ஆமோதிக்கின்றேன்...

மிக்க நன்றி...