Monday, November 15, 2010

உன்னால் முடியும்...

பெண்ணே!
சிறகுகளே அறுக்கப்பட்ட பறவையாய்
நீயிருந்தால் பறக்க முடியாதென்று
மனதில் நினைக்கலாம் உண்மைதான்.
இறகுகள் வெட்டப்பட்ட பறவையாய்
நீயிருப்பதால் பறக்க முடியும்
மீண்டு(ம்) என்பதை உணர்ந்துவிடு.

ஆனால்!
இறகுகள் நறுக்கப்பட்டு மீண்டும்
முளைத்து இருப்பதையும் மறந்து
பறப்பதற்கு என்றுமே முயற்சிக்காமல்
முன்புபோல் பறக்க முடியாதென்று
மனதுக்குள் நீயே நினைத்து
உன்னை ஏன்? மு(அ)டக்கிக்கொள்கிறாய்...

ஆதலால்!
நினைத்திடு! முயற்சித்திடு!! பறந்திடு!!!
வீழ்ந்த இறகுகள் துளிர்ந்திருக்கும்
மகிழ்வோடு உலகத்தை வலம்வந்திடு
புதுஉலகம் உனக்காக காத்திருக்கு...
விடியுமென்று நம்பும் நீ - உன்னால்
முடியுமென்பதையும் உலகத்திற்கு வாழ்ந்துக்காட்டு...

6 comments:

தமிழ்த்தோட்டம் said...

உங்கள் ஊக்கமான கவி வரிகளுக்கு பாராட்டுகள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தமிழ்த்தோட்டம்,

மிக்க நன்றி தங்களின் ஊக்கமான பின்னூட்டத்திற்கு...

க.பாலாசி said...

முயற்சியின்றி எதுவும் நடக்காது... பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை...

Aathira mullai said...

தன்னம்பிக்கை வரிகள் என்னுள்ளும் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது. எல்லோர் மனதிலும் ஏற்படுத்தும். பெண்களுக்குக் குரல் கொடுக்கும் உங்கள் பெண்ணிய சிந்தனைக்கு வாழ்த்துக்கள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாசி,

மிக்க நன்றி தோழா...

சரியாக சொன்னீர்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

ரொம்ப நாளை இந்தபக்கமெ வருவதே இல்லை.. நலமா?

உங்களுக்குள் ஓர் புத்துணர்வா? மிக்க மகிழ்ச்சி.... அதற்கான பலனை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக்கொண்டு....

மிக்க நன்றி தங்களின் வாழ்த்துக்கு...