Sunday, November 28, 2010

நன்றி...


இனிய தோழா!

நான்கு அறைகளை கொண்ட
வெற்றிடமான கல்வெட்டு சுவரில்லை
எந்தன் இதயம்...
உங்களுக்கான வாசகத்தை அதிலிருந்து
எடுத்து அள்ளி எளிதில்
உங்களுக்கு பதிலிட...
உங்களின் அன்பால் சுரங்கமாக
மாற்றப்பட்ட பலபேரின் உள்ளங்களைய்ம்
புதையலாக கொண்டது...
பூமிக்கு அடியில் கிடைக்கும்
கனிமங்களை தனியாக பிரித்து 
பயன்படுத்தும் முறைப்போன்றது...
பிறருக்கு நன்றியென்னும்
ஒற்றைச்சொல் சொல்லுவதும்...

பொன், மிக்க நன்றி தங்களின் இனிய மடலிற்கும் மற்றும் குறுஞ்செய்திக்கும்.... மற்றும் எனக்கு ஊக்கமளிக்கும் அனைவருக்கும்.

4 comments:

எஸ்.கே said...

நம் நட்புகள் என்றென்றும் தொடரட்டும்!

Anonymous said...

மன்னித்துவிடு கவிஞ்ஞனே...வேறெதுவும் தோணலை.ஸ்தம்பித்துபோனது மனது.பொன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...

தங்களின் நட்பினை, அடையாள சின்னமாய் இந்த பின்னூட்டமே எடுத்துரைக்கிறது... மிக்க மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

மிக்க நன்றி...

தங்களின் பார்வைக்கும்... என் நட்பினை ஏற்றுக்கொண்டமைக்கும்...

மன்னிப்பு எதற்கு நமக்குள்... எனக்குள் இருக்கும் உணர்வுகளை வெளிக்காட்ட உதவுவது உங்களை போன்றவர்களின் உள்ளம் மட்டும்தான்...

நன்றி என்ற ஒர்ச்சொல் சொல்லதான் இத்தனை பீடிகை... வேறெந்த நோக்கமும் இல்லை...

உங்களின் மடல் கண்டு நான் மனம் ஸ்தம்பித்தேன்... என்னைவிட தங்களுக்கு பன்மடங்கு ஆற்றல் இருப்பதை உணர்ந்து...