Friday, November 5, 2010

தீராதவலி (தீபாவளி)


குளிக்கும் எண்ணெயில் என்கண்ணில் இருக்கும்
உந்தன் உருவத்தை பார்த்தேன்...

எரியும் தீபஒளியில் என்சிந்தையில் இருக்கும்
உந்தன் முகத்தை பார்த்தேன்...

உடுத்தும் புத்தாடையில் என்மனதில் இருக்கும்
உந்தன் எண்ணங்களை பார்த்தேன்...

சுவைக்கும் இனிப்பில் என்னுதட்டில் இருக்கும்
உந்தன் மொழிகளை பார்த்தேன்...

மின்னும் மத்தாப்பில் என்மூச்சில் இருக்கும்
உந்தன் சிரிப்பினை பார்த்தேன்...

இத்தனை எத்தனையோ என்னருகில் நீயில்லாமல்
தீபாவளி எனக்கு தீராதவலியாய்...

6 comments:

எஸ்.கே said...

அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

elamthenral said...

//இத்தனை எத்தனையோ என்னருகில் நீயில்லாமல்
தீபாவளி எனக்கு தீராதவலியாய்.//
intha dewali ennakum ippadi thaan pochchu.. nalla varigal.. ithil ennai naane paarpathu ponru ru unarvu.. i mean intha varigal ennaium sindikka vaikindrathu vasan sir.... nice poem..

Anonymous said...

physically not of course.....but in you....living.....pon.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

இந்த தீராத வலி இந்த தீபாவளியோடு போகட்டும் உங்கள் வாழ்வில்... வருகின்ற கால கட்டத்தில் தங்களின் இந்நிலை மாறி, மகிழ்ச்சி வெள்ளம் உள்ளத்தில் பொங்க இறைவனை வேண்டுகிறேன்...

மிக்க நன்றி... வருகைக்கும் தங்களின் மனத்தினை என்னோடு பகிர்ந்துக்கொண்டமைக்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

உண்மைதான்... அவள் என்னருகில் என்னோடு இல்லாமல் போனாலும் உள்ளத்தில் இருக்கும் அவளை எண்ணும் தருணமும் மகிழ்ச்சி தான்... அவள் அருகினில் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாய் இருக்கும் என்பது நெகிழ்ச்சியாய்...

மிக்க நன்றி...