Tuesday, December 28, 2010

வறுமையும்... பனியின் கொடுமையும்...

இவனது வீட்டுக்குள்
கொட்டியது
மழைக்காலத்தின் மழைநீர்
மட்டுமல்ல...
இப்பனிகாலத்தில் பனியும்
சொட்டிகொண்டு...

நிலவின் ஒளியோடு
ஓட்டின்மீது விழுந்த
பனித்துளி
காற்றில் கலந்து
வீட்டின் தரைமீது
நீர்த்துளியாய்...

23 comments:

Anonymous said...

பனித்துளியை ரசிப்பதா??
வறுமையை நினைத்து கவலைப்படுவதா???

ப்ரியமுடன் வசந்த சொன்னது போல ஒரு கண்ணில் தேனும் மறு கண்ணில் வலியும் நிறைந்த வாழ்க்கை தான் இது.

arasan said...

அற்புதமான படைப்பு ...

வரிகளும் சரி அதை கோர்த்த விதமும் சரி அருமை ...

கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

நேரில் இதனை கண்ட என் கண்களுக்கு வலியை தந்தது...

தங்களின் கவலைகளையும் சில பேர் பனித்துளியாய் ரசித்துக்கொண்டு...

இரு கண்ணும் ஒரு காட்சியை காட்டுகிறது என்றாலும் ஒரு கண்ணில் மட்டும் எப்பொழுதும் காண இயலாது என்பது போல் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி...

இது தஞ்சையில் நான் கண்ட ஒரு நண்பர் ஒருவர் வீட்டின் நிலைதான்...

பார்க்கும் போது எனக்கும் அப்படித்தான் இருந்தது...

ஆர்வா said...

வரிகளில் வலி தெரிகிறது. நமக்குள்ளும் தெரிக்கிறது..



புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா....

Meena said...

நல்ல கவிதை. பாராட்டுக்கள்
இந்த கணம் எத்தனையோ உள்ளங்கள் ஓட்டைக் கூரையில்
நாம் மட்டும் ஆடம்பரமான வீட்டில்.

சென்னை பித்தன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்,தஞ்சை.வாசன்.

Vijay Ananth S said...

நன்று....
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மணி,


மிக்க நன்றி...

தங்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

மாணவன் said...

இந்த புது வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

நன்றி
நட்புடன்
உங்கள் மாணவன்
January 1, 2011 12:06 PM

தோழி said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. வாசன்...

arasan said...

நேரில் கண்ட நிகழ்வா ... படிக்கவே நெஞ்சு கனத்து போகிறது....
நேரில் கண்ட உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் .....

உங்களுக்கும்., உறவுகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்துக்கள் .....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இனியவன்,

மிக்க நன்றி....

தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மீனா,

மிக்க நன்றி...

தங்களை போல் எல்லாரும் சிந்தித்தால் மாற்றம் உலகில் கண்டிப்பாய் பிறக்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சந்திரசேகர் அவர்களுக்கு,

மிக்க நன்றி...

தங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள விஜய்,

மிக்க நன்றி...

தங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...

தங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மாணவன்,

மிக்க நன்றி...

தங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழி,

மிக்க நன்றி...


தங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி...

நேரில் கண்ட நிகழ்வுதான்... நெஞ்சம் பதைத்தது அக்கணம்...

நண்பன் சொன்னான், “ இது நம்ம சொந்த வீடு இல்லையே கவலைபட வாடகை வீடு தானே என்றான்”... இதனை சரிசெய்து கொடுக்க முடியாத வறுமையில் வீட்டின் உரிமையாளர் என்றான்... அவராலே முடியாதது என்னால் மட்டும் எப்படி என்றான்...

தங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Meena said...

இயற்கையை நன்கு வர்ணித்து இருக்கிறீர்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மீனா,

மிக்க நன்றி...

நான் ரசித்த இயற்கை நிகழ்வை, நீங்கள் வரிகளின் வழியே உணர செய்தமையில் எனக்கு மகிழ்ச்சி...