Tuesday, November 29, 2011

வாழ்க்கை...



வாழ்க்கை ஒரு வியப்புகுறிதான்!
வியப்புகுறி போல்பலர் நிமிர்ந்து
நிற்க ஆசையில் முற்படுகிறார்கள்
ஆனால்
வினாகுறி போல்சிலர் குனிந்து - ஏனோ
நிற்க முடியாமல் வளைகிறார்கள்???

வாழ்க்கையில்,
ஒரேயொரு வியப்புகுறி வருகிறது
ஆனால்...
பல வினாகுறிகள் ஒன்றன்பின்
ஒன்றாய் தொற்றி உடன்வந்து - மனதில்
குழப்பத்தை மட்டும் பாவிக்கின்றது...

வினாக்களை கண்டு தொ(கு)லைந்துபோகாமல்
வியக்கும் வகையில் உயர்த்திக்கொள்ள
விருவிருப்பாக வாழ்க்கையென்னும் ஓடுகளத்தில் - பலரும்
விரைந்துசெல்ல ஆயுத்தபடுத்திக்கொண்டு அதில்நானும்...

5 comments:

SURYAJEEVA said...

வளைந்து நிற்கும் கேள்விக் குறிகளை
அடித்து நிமிர்த்தி
ஆச்சரியக் குறியாக்குவோம்...

போளூர் தயாநிதி said...

மிகவும் சிறப்பான வரிகள் நண்பரே குறியீடாக அமைத்து இருந்தாலும் எளிமையும் சிறப்பும் பாராட்டுகள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சூர்யஜீவா,

மிக்க நன்றி தோழரே...

முயற்சி என்றும் நம்மை முன் நிறுத்தும்... விடாமுயற்சியோடு உழைப்போம்.. முற்றுப்புள்ளிகளை கூட ஆச்சரியகுறிகளாக மாற்றுவோம்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தயாநிதி,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் அழகிய பின்னூட்டவரிகள் வழியே ஊக்கபடுத்துவதற்கும்...

இராஜராஜேஸ்வரி said...

வினாக்களை கண்டு தொ(கு)லைந்துபோகாமல்
வியக்கும் வகையில் உயர்த்திக்கொள்ள

வீணாய்ப்போகாமல் வாழ்வு காக்கப்படும்
விரைந்த கவிதை.பாராட்டுக்கள்..