Tuesday, November 22, 2011

அவளின் நிர்வாணமும்... அந்த நீலவானமும்... (1)



விண்ணில் இருக்கும் வானம்
பார்த்து கண் மயங்காதோர்?
மண்ணில் உண்டெனில் ஆச்சர்யம்தான்!!!
வஞ்சி உன்னை கண்டும்
நெஞ்சம் வாடோதோர் இங்கே
மண்ணில் உண்டெனில் ஆச்சர்யம்தான்!!!
வஞ்சியும் வானமும் கிட்டதட்ட
ன்றென கூட சொல்லலாம்!

மேகம்!!! நட்சத்திரம்!!! நிலவு!!!
வண்ணங்கள் என்றுபல விந்தைகள்
நிறைந்த எந்தன் இரவுவானமே
உனக்கும் அவள்தான் போட்டி...

வானில் இவைகளை கொண்டும்
லஜாலங்கள் செய்தும் என்னையும்
என்கண்களையும் கட்டியும் போடுகின்றாய்
பார்ப்பவர்களையும் வியக்க வைக்கிறாய்...

மேகம் மூடாத வானம்
நட்சத்திரம் நிறையாத வானம்
நிலவு இல்லாத வானம்
வண்ணங்கள் நிரம்பாத வானம்
இப்படி பலநிலைகள் இருந்தாலும்
எப்படியும் காணும் கண்களுக்கு
நீலவானமாய் ரசிக்க தெரிவதுபோல
அவளும் உனக்கு போட்டியாய்....

அவள் யாரும் இல்லை
எந்தன் காதல் தேவதைதான்
தொலைத்தூரத்தில் நீயிருந்து என்னை
மயக்கி சொக்க வைக்கிறாய்...
அவளோ நான் கண்மூட
என்முன் வந்து செல்கிறாள்...

4 comments:

Ranioye said...

nice!

rajamelaiyur said...

அருமையான கவிதை
வணக்கத்துடன் :
ராஜா

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

தமிழ்வாசி பிரகாஷ் said...

காதல் வரிகள்

Pinnai Ilavazhuthi said...

தலைப்புக்கும் கவிதைக்கும் பொருந்தும் இரண்டுவரிகளை சேர்த்து இருக்கலாம்
//
மேகம் மூடாத வானம்
நட்சத்திரம் நிறையாத வானம்
நிலவு இல்லாத வானம்
வண்ணங்கள் நிரம்பாத வானம்
இப்படி பலநிலைகள் இருந்தாலும்
எப்படியும் காணும் கண்களுக்கு
நீலவானமாய் ரசிக்க தெரிவதுபோல
அவளும் உனக்கு போட்டியாய்....
//

மேகம் மூடாத வானம்
நட்சத்திரம் நிறையாத வானம்
நிலவு இல்லாத வானம்
வண்ணங்கள் நிரம்பாத வானம்
இப்படி பலநிலைகள் இருப்பதை போல
தாவணி போடாத தேவதையாய்
காதணி அணியாத தேவதையாய்
முகஒப்பனை இல்லா தேவைதையாய்
அவளும் உனக்கு போட்டியாய்....


என எழுதி இருக்கலாமா? நண்பனே !... உன் தலைப்புக்கு, உன் தேவதையை நீ இன்னும் வர்ணிக்க வேண்டாமா? அந்த வானத்தை விட ஒரு மடங்கு அழகாக!...

//
வானில் இவைகளை கொண்டும்
பலஜாலங்கள் செய்தும் என்னையும்
என்கண்களையும் கட்டியும் போடுகின்றாய்
பார்ப்பவர்களையும் வியக்க வைக்கிறாய்...
//
இதில் " பலஜாலங்கள் செய்தும் என்னையும்" என்பதற்கு பதிலாக " பலஜாலங்கள் செய்து என்னையும்"
என எழுதி இருக்கலாமா? நண்பனே!...