Monday, January 31, 2011

ஐவிரல் தீண்ட துடிக்குதடி...




கொண்ட காதலை
கவிதையாய் வடித்திட
கைகள் துடிக்கின்றது...

எழுதிடாமல் இருக்க
கைகளுக்கு விலங்கினை
பூட்டிட நினைக்கிறேன்...

அதனையும்மீறி எழுதுவதை
தடுக்க முடியாததால்
விரலினையே வெட்டிவிட
மனம் எண்ணுகிறது...

மீண்டும் ஒருமுறை
காதல் மலர்ந்தால்
உன்னை வர்ணித்து
எழுதிவிடாமல் போய்விடுமோ
என்று அஞ்சியே
செய்யாமல் போகிறேன்...

இருப்பினும் தற்போது
எழுதுவதை தடுக்க
என்கட்டை விரலினை
மடித்து கட்டிக்கொள்கிறேன்...

உன்மேனியை தீண்டிடாத
விரல்கள் என்றாலும்
காகிதத்தில் ஓவியமாய்
மீதியிருக்கும் நான்கு
விரல்களும் காதலை
சொல்லிக்கொண்டே இருக்கின்றது
அவ்வவ்வபோது என்னசெய்வேன்...



11 comments:

Unknown said...

கவிதை நல்லா இருக்கு சகோ..

arasan said...

அண்ணே அற்புதமா இருக்குங்க அண்ணே ...
நல்ல வரிகளை கொண்ட கவி மிகவும் ரசித்தேன்

arasan said...

உன்மேனியை தீண்டிடாத
விரல்கள் என்றாலும்
காகிதத்தில் ஓவியமாய்
மீதியிருக்கும் நான்கு
விரல்களும் காதலை
சொல்லிக்கொண்டே இருக்கின்றது
அவ்வவ்வபோது என்னசெய்வேன்...
//

மனசை என்னவோ பண்ணுது ...
வாழ்த்த வார்த்தைகளே இல்லை அண்ணே

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை சூப்பரா இருக்கு...

அன்புடன் மலிக்கா said...

வாசன் உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post.html

Anonymous said...

அட என்னங்க இது...
எழுத வந்தால் எழுத வேண்டியது தானே.. அதுக்கெதுக்கு இப்படி கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தணும்???

//அதனையும்மீறி எழுதுவதை
தடுக்க முடியாததால்
விரலினையே வெட்டிவிட
மனம் எண்ணுகிறது...//

அடக் கொடுமையே.. அதெல்லாம் வேணாம் வாசன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஜெ.ஜெ,

மிக்க நன்றி,

தங்களின் வருகைக்கும் & வாழ்த்திற்கும்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி...

படித்து ரசித்து பாராட்டியமைக்க்கு என் மனமார்ந்த நன்றி தம்பி...

// மனசை என்னவோ பண்ணுது ...
வாழ்த்த வார்த்தைகளே இல்லை அண்ணே//

மனசை கட்டுபடுத்துங்க.... :)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மனோ,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வரவிற்கும் மற்றும் வாழ்த்திற்கும்...

என்றும் உங்கள் வரவினை வேண்டி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புடன் மலிக்கா,

மிக்க மிகு மகிழ்ச்சி...

பார்த்தேன்... அகம் மகிழ்ந்தேன்...

தங்களின் அன்பான எந்தன் அறிமுகத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்...

முகவரி இல்லா எனக்கு மேலும் ஒரு முகவரி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

வந்தா தானே எழுதுவதற்கு... சும்மா எல்லாம் ஒரு விளம்பரத்துக்கு தான்...

வெட்டிக்க நாங்க என்ன வீரனா?
அத நாங்க தான் வேண்டாமுனு விட்டுடோம்ல... அப்புறம் ஏன் ஞாபக படுத்துறீங்க...