Thursday, November 17, 2011

எப்படி உணர்த்துவாயோ?...


எந்தன் உதடுகள்
கொடுக்கும் சத்தத்தை
வாங்கி முத்தமாக
கொடுக்க தெரிந்த
அலைபேசியே!!!
கண்கள் சிந்தும்
கண்ணீர் துளிகளை
எப்படி உணர்த்துவாயோ?

Wednesday, November 16, 2011

சொல்லிழந்து...

உந்தன் அபிப்பிராயம்
என்னவென்று கேட்டாய்?
பேசும் திறனிருந்தும்
பேசாமுடியா ஊமையாய்
உந்தன் முன்னால்
என்னுடைய நிலைமை
இதுவென்று சொல்லமுடியாமல்!!!
இனிப்புக்குள் சிக்கி
வெளிவரும் எறும்பாய்
நீருக்குள் விழுந்து
கரைசேரும் எறும்பாய்
பேசும் மொழியற்று
பயம்கூடிய உணர்வுடன் - எதிர்கால
வாழ்க்கையை நோக்கி நான்...

Tuesday, November 15, 2011

என் நிழலும்... நிலவும்... நீயே...



யார்
அறியக்கூடும்?
என்னை எனக்கு பிடிக்கவில்லை
காரணம் நான் அறியேன்
ஆனால்!
எந்தன் நிழலையோ எனக்கு
மிகவும் பிடித்து இருக்கிறது
ஏனெனில்?
என்னையே எனக்கு அழகாய்
எந்தன் கண்களுக்குள் காட்டுகிறது...
காரணம்?
ிழலின் உருவத்திலும் நீதான்
நிழல்தந்த முழுமதியும் நீதான்...

Monday, November 14, 2011

உன்னை நினைப்பதுமட்டும்...

 
உடலெல்லாம் சுட்டும் கொள்(ல்)கிறேன்
சுட்ட இடமெல்லாம் புண்ணாகி
வடுக்கள் மட்டுமே நிறைந்திருக்கிறது
உன்னை நினைப்பதுமட்டும் குறையவில்லை

பசித்தும் பட்டினியாய் கிடக்கிறேன்
சாப்பிடாமல் குடலெல்லாம் அரித்து
வயிறு மட்டுமே வலிக்கிறது
உன்னை நினைப்பதுமட்டும் சலிக்கவில்லை

உன்னைமறக்க மதுவை குடிக்கிறேன்
குடித்துவிட்டு வாந்தியும் எடுக்கிறேன்
இரத்தம் வருவதுகூட நின்றுபோகிறது
உன்னை நினைப்பதுமட்டும் நிற்கவில்லை...

போதை பொருளையும் எடுக்கிறேன்
எங்கோ ஆகாயத்தில் பறக்கிறேன்
மயக்கத்தில் என்னைகூட மறந்துபோகிறது
உன்னை நினைப்பதுமட்டும் மறக்கவில்லை...

பார்வை பார்ப்பதுயாவும் நீயாகிறாய்
கண்ணை பிய்த்துஎறிய நினைக்கிறேன்
உள்ளமும் உணர்வுமாய் என்னுள் - உயிராகினாய் 
அதைமட்டும் விடமுடியாமல் தவிக்கிறேன்....

Saturday, November 12, 2011

தோழியே உன்னோடு நான்...


அன்பே....

மரங்கள் நிறைந்த
அடர்ந்த சுந்தரவனம்
யாருமே இல்லாத
தனிமையான பாதை

பூக்கள் நிறைந்த
அழகிய நந்தவனம்
ஒருபாதத்திற்கு மறுபாதம்
மட்டும் துணையாய்...

இராமாயணத்தில் வரும்
ஒர் அசோகவனமாய்
இதுபோன்று கண்டிட
நீகேட்கும் இந்தஇடம்

அங்கே..........

நடந்து காலும்
வலிக்கும் வரை
உந்தன் நடைபயணம்
இனிதாய் தொடரட்டும்

கேட்டு மனம்
மயங்கும் வரை
இன்னிசை பாடல்
இன்பமாய் ஒலிக்கட்டும்

அழுது நெஞ்சம்
அடங்கும் வரை
உரக்க கதறல்
இயல்பாய் இருக்கட்டும்

உடல் சோர்வும்
நீங்கும் வரை
அமர்ந்து கண்மூடி
இதமாய் இளைபாறட்டும்.

சட்டென்று மழை
உன்மீது கொட்டட்டும்
கண்ணீரின் தடயங்கள்
அதனோடு மறையட்டும்

பனிமூட்டம் உன்னை
மேகமாய் சூழலட்டும்
உன்சோகங்கள் யாவும்
அதனில் மறத்துபோகட்டும்

ஆனால்.....

இவையாவும் நிகழும் சமயம்
உந்தன் அருகினில் ஆறுதலாய்
இல்லாமல் நான் போகலாம்
உந்தன் மன விருப்பத்தால்...

நீசென்ற பாதையும் நானே!
நீமகிழ்ந்த பாடலும் நானே!
நீசிந்திய கண்ணீரும் நானே!
நீயெடுத்த ஓய்வும் நானே!!

நீநனைந்த துளியும் நானே!
நீசிலிர்த்த குளிரும் நானே!
நீரசிக்கும் வார்த்தையும் நானே!
உன்னோடு என்றென்றும் நானே!!

மகாபாரதத்தில் வரும்
ஓர் பிருந்தாவனமாய்
உன்வாழ்க்கை மாயையாய் - விரைவில்
நீசிறக்க மாறட்டும்...

Monday, November 7, 2011

அன்பும் அடங்கி போனது...


அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்
அன்பினை அடைத்துதான்
வைத்திருக்கிறேன் உள்ளே...

அன்பே உன்னைநான்
என்னிதயத்தில் அடைத்தேன்
நீகொடுத்த சிலப்பொருட்களை
என்வீட்டு வரவேற்புஅறையின்
கண்ணாடிக்கூண்டிற்குள் நித்தம்
கண்டிட அடுக்கியும்வைத்தேன்
நீவழங்கிய சிலப்பொருட்களை
என்னோட அறையின்
இரும்பு அலமாரிக்குள் - யாருக்கும்
தெரியகூடாதென ஒழித்தும்வைத்தேன்..

Saturday, November 5, 2011

நீயா..? நானா..?


தம்பிக்கும் அண்ணனுக்கும் சண்டை
தந்தைக்கு கொள்ளி வைப்பதில்...
சொத்தை பங்குபோட்டு கொள்வதற்கல்ல
சிறுவயதில் பொதுவாக உண்டாகும் 
முக்கியத்துவம் யாருக்கு? என்றபோட்டி
யாதும் அறிந்திராத வயதினிலே...

Friday, November 4, 2011

உனக்காக... உன்னோடு...




உன்னருகில் நான் இருக்கிறேனென்ற
உணர்வில்நீ நெடுந்நேரம் தூங்குவாயென்றால்
உனக்காக இரவில் எந்நாளும்
உறங்காமல் விழித்திருக்க ஆசைதான்...
உன்னுடன் இரவில் மட்டுமல்ல - பகலிலும்
உன்னோடு இருக்கும் சமயமெல்லாம்...

Thursday, November 3, 2011

எது முத்தம்?

உள்ளிருக்கும் அன்பினை
வெளிக்காட்டிட மெல்ல
உதட்டால் கொடுப்பது
மட்டும்தான் முத்தமா?
இல்லை???
உறுப்புகள் ஒன்றோடு
ஒன்று உரசுவதும்
முத்தமா?

கைவிரல்கள் தொடுவதும்
முத்தமோ?
கால்விரல்கள் தீண்டவதும்
முத்தமோ?
விழிகள் ஒன்றையொன்று
உரசாமலே பற்றியெரிவதும்
ஒருவகை முத்தமோ? - இல்லை
சத்தம்வந்தால் தான்முத்தமோ?

Wednesday, November 2, 2011

மாறமுடியாமல் நான்...




சன்னலின் முதுகுக்கு பின்னால் இருந்தவள் இன்று
சன்னலை முதுகுக்கு பின்னால் சுமந்து செல்கிறேன்

நிலவுக்கு இணையாக அழகுக்கு ஒப்பிடப்பட்டவள் இன்று
நிலவின் மண்ணிலே அறிவால் மிதந்துநடந்து செல்கிறேன்

வீட்டுவேலைகளை செய்வதற்க்கு என்றே பழக்கப்பட்டவள் இன்று
வீட்டிலிருந்தே வேலைகள் யாவற்றையும் செய்து முடிக்கிறேன்...

உலகிற்கு முகம் தெரியாமல் அடைக்கப்பட்டவள் இன்று
உலகத்தையே தன்னுடைய அறைக்குள் நிலைநிறுத்தி மகிழ்கிறேன்

திரைப்பட பாடல்களில் பூத்தொடுப்பவளாய் வந்தவள் இன்று
திரைப்பட பாடல்களுக்கு பாக்களை தொடுத்து கொடுக்கிறேன்

வாழ்க்கையில் எத்தனையோ முன்னேறிவிட்டேன் ஆனாலும் இன்று
வாழ்க்கைக்கு மற்றொருதுணை தேவையென்பது மட்டும் மாறாமல்...

கணவன் என்மீது அன்பில்லாதவன் என்றாலோ?
கணவன் பிரிந்து சென்றுவிட்டான் என்றாலோ?
கணவன் இறந்து மடிந்துவிட்டான் என்றாலோ? - இந்நிலை
ஒன்றில் இருந்து மட்டும்நான் மாறமுடியாமல்.

Saturday, October 29, 2011

மரம்...




இலையும் கிளையும் இல்லாத மரமும்

சிறகும் இறகுமுள்ள எங்களுக்கு ஆதரவாய் ...

மரம் எரிக்கும்வரை மனிதர்களுக்கு துணையாய் ...

எரித்து கரியானாலும் உதவியாய் சிலநேரம்...


Friday, October 28, 2011

புண்ணியமும்... பாவமும்...

செய்திட்ட பாவங்கள் யாவும்
தீர்ந்து போகட்டும் என்றோ
தாயவளும் காசிக்கு செல்கிறாள்...

ஒருரூபாய் கூட கைச்செலவுக்கு
கொடுத்து அனுப்பிவைக்க முடியாமல்
பெற்றமகனும் பெரும்பாவியாய் இங்கே...

Thursday, October 27, 2011

தீபாவளியும்... நீயும்....



பட்டாடைக்கும் உன்மேனிக்கும்
மென்மையில் போட்டியோ?
தோற்றுவிட்ட பட்டுக்கு
உன்பெயரையே முடிச்சூட்டியோ?

மறந்துவிட கூடுமென்றோ
விளம்பரமும் நித்தம்
அறிமுகம் செய்துகொண்டே
உன்பெயரை பலமுறை...

Tuesday, October 25, 2011

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்... அனைவருக்கும்....




 தீபாவளி பண்டிகை வேண்டாமென சொல்லவில்லை.... கொண்டாட கூடாதென சொல்லிய ஒரு நபருக்கு அளித்த பதில்.. அதுவும் அவருடைய கேள்விக்கு...

// இராவணனைக் கொன்றதற்காக எடுக்கப்படுகின்ற விழா தீபாவளியானால்,

அந்த விழாவினைத் தமிழர் கொண்டாடலாமா?

தமிழனைக் கொன்ற ஆரியனை வணங்கலாமா?

தமிழனுக்குச் சுய உணர்வு எனவொன்று இருக்க வேண்டுமல்லவா?? //

இது எனக்கு ஒரு நண்பர்... தீபாவளி வாழ்த்திற்கு கூறியது... அதன் விளைவாக இதனை எழுதுகிறேன்...


எந்தவொரு மதமும்
எதற்கும் இழிவில்லை
எந்தவொரு மொழியும்
எதற்கும் கீழில்லை
எத்தனையோ வேதாந்தம்
சொல்லும் மனிதா
எல்லாம் வார்த்தைதானோ?

இன்று ஏனோ
இனம் பிரித்து
தமக்குள் பார்க்கின்றாயே?
தமிழ் இனத்தை
சேர்ந்த ஒருவனை(இராவணனை)
கொன்ற செயலுக்கு
ஆரிய இனத்தலைவனுக்கு(இராமனுக்கு)
விழாவா? இதுதேவையா?
தீபாவளி நமக்கில்லையென்று
காவியம் சொல்கிறாய்...
நியாயம் பேசுகிறாய்
இறக்கும் தமிழன்மீது
இருக்கும் தமிழன்மீது
இல்லாத அக்கறை???
இறந்த தமிழன்மீது!!!
வாழ்க நீகொண்டிருக்கும்
தமிழன் மீதான
தன்னிகரற்ற அன்பு...

இருக்கும் தமிழனுக்காக
இறக்கும் தமிழனுக்காக
உரிமைபெற வேண்டுமெனில்
தீபாவளி வேண்டாமென
உரக்கச்சொல் நாடறிய
உன்னோடு நானும்
தோளோடு தோளாக
சேர்கிறேன் ஒன்றாக...

சிந்திப்போம்... செயல்படுவோம்.... செயல்படுத்துவோம்...

Sunday, October 23, 2011

வேற்றுமையில் ஒற்றுமை...



வயிறு பெருத்தது
வாய் குமட்டுகிறது
வாந்தி வருகிறது
மயக்கம் தலைக்கேறுகிறது
தலை சுற்றுகிறது
உலகம் மறை(ற)க்கிறது...

இதுவென் கர்ப்பத்தின்
அறிகுறிகள் மட்டுமல்ல...
எந்தன் கணவனின்
போதை நிலையும்...

Thursday, October 20, 2011

ஏக்கம்... (மணமாகாத பெண்ணின்)



பெற்றோர் எனக்காக வைத்திட்ட
பெயர் ஒன்றுமட்டுமே வாழ்வில்...

என்னை அழைக்க நானே
எனக்குள் இட்டுக்கொள்வது எத்தனையோ?

இந்நாள்வரை அதிலெதுவுமே நிரந்தரமாய்
இல்லாமல் எல்லாமே கா(ல)த்தோடு...

மணமகன் ஒவ்வொருவரின் ஜாதகம்
மனைக்கு வரும்போதும் மாறிக்கொண்டே...

அவனுடைய பெயருக்கு பின்னால் - சேர்த்து
இவளுடைய பெயரை எண்ணிக்கொண்டே...

Tuesday, October 18, 2011

பெண்ணாகிய நான்...



பழகிபோன வாழ்க்கையாய் ஆகிவிட்டதால்
பலநேரம் அதற்குள் என்னை
பதுக்கிகொள்ள ஆரம்பித்து விட்டேன் - மகிழ்ச்சியாய்
பட்டாம்பூச்சியென பறக்க முடியாவிட்டாலும்...

புளித்துவிட்டது வாழ்க்கை போதுமென
பாகம்பேசி அதனிலிருந்து என்னால்
வில(க்)கிகொள்ள முடியாமலும் தவிக்கிறேன் - போராட்டமாய்
பட்டுபுழுபோல் நெளிந்துக்கொண்டே என்நாட்கள்

பிறப்பதற்கு முன்பே என்விதி
அப்போதே தெரிந்திருந்தால் ஒருவேளை
கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேன் - கரைக்கும்
வைரமுத்துவின் வைரவரிகளை போன்று...

மணப்பதற்கு முன்னாவது என்விதி
நான் அறிந்திருந்தால் ஒருவேளை
உந்தன் கர்ப்பத்தையாவது சுமக்காமல் - கரையாமல்
எந்தன் காலத்தை தள்ளியிருப்பேன்...

வாழ்வில் உண்டாகிய இக்கதி
இறைவன் செய்திட்ட சதியோ?
எனக்கும் எழுதபடாத விதியோ? - என்னவோ?
மதியிருந்தும் மிதிபடுகிறேன் வழியில்லாமல்...

Friday, October 14, 2011

ஒதுக்கவில்லை.... ஒதுங்கிகொள்கிறேன்...


தோழியே!

உலகத்தில் எங்கோ வசித்தாலும்
உன்னாலும் நான் வாழ்கிறேன்
நீசொல்லி கேட்டிட ஆசைதான்...

ஆனால்

உன்னால் தான் அழுகிறேனென்று
நீமட்டுமல்ல இனியார் சொல்லியும்
கேட்கவே கூடாதென நினைக்கிறேன்...

அதனால்...

எனக்காகவும் நீ அழவேண்டாம்...
என்னாலும் நீ அழவேண்டாம்..
எந்நாளும் நீ அழவேண்டாம்...

Thursday, October 13, 2011

அறியாமல்...



கடல்நீர் எடுத்து சிலையெடுத்தால்
காற்றில் அவன் ஆவியாகி
காணும் சிற்பமாய் உப்பாய்
கையில் இருக்ககூடும் உன்னோடு...

கண்ணீர் எடுத்து சிறுபுள்ளியாய்
கதை எழுத தொடங்குகிறாய்...
கறிக்கு உதவாத ஏட்டுசுரக்காயாக - இருப்பினும்
காலம் உன்துணை இருக்கட்டும்...

Tuesday, October 11, 2011

இது தான்..



நான் சொல்வதற்கும்
நீ செய்வதற்கும்
உள்ள வித்தியாசம்...
நான் ஆண்
நீ பெண்
என்பதுபோல் நமக்குள்...