Saturday, November 12, 2011

தோழியே உன்னோடு நான்...


அன்பே....

மரங்கள் நிறைந்த
அடர்ந்த சுந்தரவனம்
யாருமே இல்லாத
தனிமையான பாதை

பூக்கள் நிறைந்த
அழகிய நந்தவனம்
ஒருபாதத்திற்கு மறுபாதம்
மட்டும் துணையாய்...

இராமாயணத்தில் வரும்
ஒர் அசோகவனமாய்
இதுபோன்று கண்டிட
நீகேட்கும் இந்தஇடம்

அங்கே..........

நடந்து காலும்
வலிக்கும் வரை
உந்தன் நடைபயணம்
இனிதாய் தொடரட்டும்

கேட்டு மனம்
மயங்கும் வரை
இன்னிசை பாடல்
இன்பமாய் ஒலிக்கட்டும்

அழுது நெஞ்சம்
அடங்கும் வரை
உரக்க கதறல்
இயல்பாய் இருக்கட்டும்

உடல் சோர்வும்
நீங்கும் வரை
அமர்ந்து கண்மூடி
இதமாய் இளைபாறட்டும்.

சட்டென்று மழை
உன்மீது கொட்டட்டும்
கண்ணீரின் தடயங்கள்
அதனோடு மறையட்டும்

பனிமூட்டம் உன்னை
மேகமாய் சூழலட்டும்
உன்சோகங்கள் யாவும்
அதனில் மறத்துபோகட்டும்

ஆனால்.....

இவையாவும் நிகழும் சமயம்
உந்தன் அருகினில் ஆறுதலாய்
இல்லாமல் நான் போகலாம்
உந்தன் மன விருப்பத்தால்...

நீசென்ற பாதையும் நானே!
நீமகிழ்ந்த பாடலும் நானே!
நீசிந்திய கண்ணீரும் நானே!
நீயெடுத்த ஓய்வும் நானே!!

நீநனைந்த துளியும் நானே!
நீசிலிர்த்த குளிரும் நானே!
நீரசிக்கும் வார்த்தையும் நானே!
உன்னோடு என்றென்றும் நானே!!

மகாபாரதத்தில் வரும்
ஓர் பிருந்தாவனமாய்
உன்வாழ்க்கை மாயையாய் - விரைவில்
நீசிறக்க மாறட்டும்...

2 comments:

இந்திரா said...

//இராமயனத்தில் வரும்
ஒர் அசோகவனமாய்
இதுபோன்று கண்டிட
நீகேட்கும் இந்தஇடம்//


அவசரமா டைப் பண்ணீங்களா????

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி தோழி...

திருத்தம் செய்துவிட்டேன்... இதற்கு உங்களை மாதிரி நல்ல தோழிங்க வேணும் என்கிறது...