இரவில்...
என் வீட்டின் முற்றத்தில்
வானில் காணும் நட்சத்திரங்களை
சிறைபிடிக்கின்றேன்...
பகலில்...
உன் வீட்டின் வாசலில்
தரையில் கோலம் இடுவதற்கு
புள்ளிகளாய் அவையிருக்க...
பகலில்...
மேக கூட்டங்களை
கைது செய்கின்றேன்
மாலையில்
புள்ளியற்ற கோலமாய்
நீ தீட்டிட....
என் மனதினிலும்
என் வீட்டினிலும்
நீ மாக்கோலம் போடும்
நாள் எந்நாளோ?
காணாத கோலங்களும்
அழியாத கோலங்களும்
நான் உன்னில் காணும்
நாள் எந்நாளோ? என்று...
9 comments:
//நாள் எந்நாளோ? என்று...தஞ்சை.வாசன்//
சீக்கிரமா ஒன்றை வலச்சிப்போடுங்க தலைவரே....
கவிதை அருமை.....
அன்புள்ள பாலாஜி,
நானும் தேடிக்கிட்டு(வலை வீசிக்கிட்டு) தான் இருக்கேன்...
ஒன்னும் கிடைக்க மாட்டேங்குது...
மிக்க நன்றி...
உன் வீட்டின் வாசலில்
தரையில் கோலம் இடுவதற்கு
புள்ளிகளாய் அவையிருக்க...
உன் வீட்டின் வாசலில்
தரையில் கோலம் இடுவதற்கு
புள்ளிகளாய் அவையிருக்க...
அப்பப்பா காதலிக்காக நட்ச்சத்திரங்களைக்கூட சிறைஎடுப்பீர்களோ...அதுவும் காதலியின் கோலத்தில் புள்ளியாக...
வானவெளி என்ன ஆவது....pon..
///காணாத கோலங்களும்
அழியாத கோலங்களும்
நான் உன்னில் காணும்
நாள் எந்நாளோ? என்று...///
வெகு சீக்கிரம் அமைய வாழ்த்துகள் வாசன், பெயர் சொல்லாமலே உங்களைப் பின்தொடர்ந்து சிறைப் பிடிப்பார்கள் கவனம் ;)
அன்புள்ள பொன்,
நம்முடைய வானவெளியில் எத்தனையோ லட்சங்கள் நட்சத்திரங்கள் இருக்கு...
நான் சின்னதா 5புள்ளி x 6வரிசை இல்லாட்டி 10புள்ளி x 8வரிசை அதிகபட்சமாக 100 நட்சத்திரம் பிடித்தால் போதும் அத வைத்தே தினம் கோலம் போட சொல்லிடலாம்...
இதபோய் பெரிசா சொல்லுறீங்க...
நாட்டுல பெரும் புள்ளிகள், அங்கங்க இடம் இடமா வலைத்து அடுக்குமாடி கட்டிடம் வணிக வளாகம் என்னும் கோலங்களை போடுகின்றார்கள்...
அதெல்லாம் கண்டுக்க மாட்டீங்க... நம்மல இப்படி வெளுத்து வாங்குறீங்க...
அன்புள்ள பாலன்,
தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
//பெயர் சொல்லாமலே உங்களைப் பின்தொடர்ந்து சிறைப் பிடிப்பார்கள் கவனம் ;)//
யார் அவரோ?
ரொம்ப அருமையாத்தான் வாச் பன்னிருக்கங்க தொடருங்கள் நண்பா நன்றி நன்றி
அன்புள்ள சபீர்,
என்னை நீங்களும் நல்லாவே கவனிப்பது தெரிக்கின்றது...
இனி உஷார் ஆயிடுவோமில...
//இரவில்...
என் வீட்டின் முற்றத்தில்
வானில் காணும் நட்சத்திரங்களை
சிறைபிடிக்கின்றேன்...//
அற்புதமான கவிதை..
இப்படி எல்லா நட்சத்திரங்களையும்
நீங்கள் சிறைப் பிடித்துவிட்டால்
மற்ற கவிஞர்கள்
தேடுவார்களே.. !
Post a Comment