Saturday, May 8, 2010
தோழியே! மனம் மாறியதேனோ?
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசினாய்
வேப்பம்பூவின் தன்மையை
மனதுக்குள் கொண்டாய் - ஆனால்
ரோஜாப்பூவின் தோற்றத்தை
முகத்தில் காட்டியது எதனாலோ?
அகத்தின் அழகானது
முகத்தில் தெரியும் என்பதனை
மறந்து இயற்கைக்கு எதிராய்...
செயற்கையாய் நடிக்க துணிந்தாய் - அறிந்திட
அருகினில் நாங்கள் யாருமில்லை
என்று மனதில் எண்ணியதாலோ?
உறவுகள் கைபிடித்து கொடுக்காமல்
கைபிடித்தவனை உறவுகளுக்கு காட்டியதால்
தோள்தட்டி ஆறுதல்தரும் நிலையில்
அவர்கள் இல்லாமல் போனாலும் - அவர்கள்
கைக்கொட்டி சிரிக்கும் நிலைமை
வாழ்வில் வராமலிருக்க நினைப்பதனாலோ?
தண்ணியடிக்கும் கணவன் என்பதனாலோ
தண்ணீரும் குடிக்க மறுக்கின்றாய்
கண்ணீரை தினம் வடிக்கின்றாய்
செந்நீரை சிந்த சிந்திகின்றாய் - அதனால்
தூக்கத்தையும் ஊக்கத்தையும் இழந்து
துக்கத்தையும் ஏக்கத்தையும் கொண்டதனாலோ?
மனஅழுத்தத்தில் உன்னை நீயே
மாய்த்துக்கொள்ள நினைப்பது தவறு
இன்று சோகங்களை சொல்லாமல்
உன்மன ஆழத்தில் புதைத்தாலும் - அவை
நாளையாவது சுகமென்னும் புதையலாய்
உனக்கு கிடைத்திட வேண்டி நான்...
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
உண்மைலே ரொம்ப அருமையான அனுபவமான வரிகளை கொண்டுள்ளது.என் மனதை ரொம்ப கவர்ந்து விட்டது இக்கவிதை .நன்றி நண்பா.நல்ல தொரு எடுத்துக்காட்டு உங்கள் கவிதை.10000000000000நன்றிகள் உங்களுக்கு
//நாளையாவது சுகமென்னும் புதையலாய்
உனக்கு கிடைத்திட வேண்டி நான்...//
நல்ல கவிதைங்க வாசன்.... நானும் வேண்டுகிறேன்....
மன ஆறுதலும், ஊக்கத்தையும் தரும் வரிகள்!
வாழ்த்துகள் வாசன்!
அன்புள்ள சபீர்,
ஊக்கம் தரும் உங்களின் அன்பான வரிகளுக்கு என் நன்றிகள்...
அன்புள்ள பாலாஜி,
நம்மின் வேண்டுதல் அவளுக்கு நல்லதொரு வாழ்வாக மிஞ்சிய வாழ்க்கை அமையட்டும்...
அன்புள்ள அண்ணாமலை,
மிக்க நன்றி ...
நம்மின் ஆறுதலும் ஊக்கமும் அவளை அடையட்டும்...
//இன்று சோகங்களை சொல்லாமல்
உன்மன ஆழத்தில் புதைத்தாலும் - அவை
நாளையாவது சுகமென்னும் புதையலாய்
உனக்கு கிடைத்திட வேண்டி நான்...//
உண்மைக்காதல் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசினாலும் உள்ளேயும் புறத்தையும் தான் காதலித்தவருக்கு நல்லதையே நினைக்கும் என்று கட்டியும் கூறும் உண்மை வரிகள்..வாழ்த்துகள்..
அன்புள்ள ஆதிரா,
தங்கள் உள்ளத்தின் உண்மையான வரிகளுக்கு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...
Post a Comment