Wednesday, June 16, 2010

நானும்... மேகமும்...


பெய்யும்மழை மண்ணில்
பெய்திடும் முன்பு
இடம்தன்னை தேடி
நீலநிற வானில்
விரைந்து ஓடிடும்
கார்கால மேகமாய்...
பூலோகத்தில் பூத்திட்ட
மானிடரில் உனைத்தேடி நான்...



தூறலின் சாரல்
தேகத்தில் தீண்டிட
மேகத்தையும் வானத்தையும்
தன்னிலையும் மறந்து
மழையில் நனைந்துபோல...
காதலை கொண்டு
உலகத்தையே மறந்து
உனைமட்டும் எண்ணி நான்...


மழை நின்றபின்
செல்வதற்கு இடம்தெரியாமல்
வானில் அடைப்பட்ட
மூண்ட மேகமாய்
காதலை பிரிந்து
செய்வது அறியாமல்
துவண்ட இதயத்துடன்
உலகில் வாழ்கின்றேன் நான்...

10 comments:

அண்ணாமலை..!! said...

மண்ணீல்..!
நீலநீற ..!

ரெண்டே ரெண்டு..
எழுத்துப்பிழை வாசன்!

கருத்துப்பிழை..!!

சொன்னா
எனக்குதான்
கழுத்துப் பிழை!
அருமையான கற்பனை நண்பரே!

கமலேஷ் said...

இந்த வெயிலுக்கு மழை கவிதைகள் மிகவும் குளிர்ச்சிதான்...படங்கள் மிக நன்றாக உள்ளது நண்பரே..

VELU.G said...

உங்கள் காதல் மழையில் எனக்கு காய்ச்சல் கண்டுவிட்டது

அருமை வாழ்த்துக்கள்

elamthenral said...

மழை நின்றபின்
செல்வதற்கு இடம்தெரியாமல்
வானில் அடைப்பட்ட
மூண்ட மேகமாய்
காதலை பிரிந்து
செய்வது அறியாமல்
துவண்ட இதயத்துடன்
உலகில் வாழ்கின்றேன் நான்...

அருமை நண்பரே!

Unknown said...

மழைக்கவிதையில் காதல் தெறித்தது பாராட்டுக்கள் வாசன்,
இரண்டு பாட்டுக்கள் ஒரே தரத்தில் கேட்கின்றன சரி செய்யுங்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

எழுத்துப்பிழையை எடுத்து கூறியமைக்கு மிக்க நன்றி...

கருத்தில்பிழை என்றால் தனிமடலில் தெரிவிக்கவும்... எந்தவித தயக்கமின்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

தங்களின் வரிகளுக்கு மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

மிக்க நன்றி...

தங்களின், அந்த அடையாள புகைப்படத்தை பார்த்து எங்களுக்கு எப்பொழுதுமே காய்ச்சல்தான்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

பாம்பின் கால் பாம்பறியும்...

உங்களின் மனதை நான் அறிவேன்...

மிக்க நன்றி பார்வைக்கும் மற்றும் கருத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலன்,

மிக்க நன்றி... உங்கள் அனைவரின் வரிகளில் நான் நனைந்துக்கொண்டு...

எனக்கு சரியாக ஒரே பாடல் மட்டும் கேட்கின்றது...

மற்றவர்களிடம் விசாரித்து எங்கே குறையென்று அறிந்து விரைவில் சரி செய்கின்றேன்..