Sunday, October 3, 2010

முரண்பாடு...

இவனது பிறப்பு
தனியார் மருத்துவமனையில்

இவனது படிப்பு
தனியார் பள்ளிக்கூடத்தில்

இவனது பயணம்
தனியார் பேருந்துகளில்

ஆனால்!
வேலை மட்டும்
எதிர்பார்ப்பு அரசுபணியில்
இது சரியோ?

8 comments:

கமலேஷ் said...

முரண் பாடை முரண் பாடாகவே யோசிக்கிரீங்களோன்னு தோணுது வாசன்.
அப்படியா என்ன..?

elamthenral said...

அருமை தஞ்சை. வாசன் சார், ரொம்ப அழகா சொன்னிங்க... இது என் மனதில் அடிகடி எழும் ஒரு கேள்வி.. அழகான வார்த்தைகள்..

Aathira mullai said...

கண்டிப்பாக முறையல்ல.. அவர்கள் எப்படியோ தள்ளியாவது வாங்கி விடுகின்றார்களே அரசிடம்..முரண் தான் நம் வாழ்க்கை..கவிதை அருமை..

vetrithirumagal said...

we are habitualised to live with controversies in every moment.very excellant.thankssss

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

மிக்க நன்றி தங்களின் வருகைக்கு...

முரண்பாடு அறியாதவன் என்பதனால் இந்த முரண்பாடோ எனக்கு... தெரியாத முரண்பாடாய் என்னுள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

மிக்க நன்றி...

பல கேள்விகளுக்கு விடை கிடைப்பது இல்லை... அதில் இதுவும் ஒன்றோ? என்னவோ?

எப்படி? உங்க வீட்டுல அரசு பணி வரன்தான் உங்களுக்கும் தேடுகின்றார்களா?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

முறையற்றது என்றாலும்... சில நீதி அல்லாத நிதியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு.

முரணாய் இருந்தாலும் உடன்பாடுடன் நாம்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகளுக்கு,

மிக்க நன்றி...

இத நான் தான் சொல்லனும்... நீங்கள் வந்ததற்கும் & பின்னூட்டம் இட்டதற்கும்...


மாற்றம் செய்ய இயலாத ஒன்றாய் மனமாற்றத்துடன் அனுசரித்து கொண்டு நம் அன்றாட வாழ்வில்...