Thursday, October 14, 2010

காலம் வெல்லும்...


ஆதவனே!
உலகத்தில் ஒருநாள்
உன்முகம் பார்க்காவிடின்
உடல்மீது நீவிழாவிடின்
உயிர்வாடி விடக்கூடும்...

என்கண்கள் உன்னை
காணாத நாட்கள்
என்வாழ்வின் இருண்ட
காலம்தான் அவை...

இந்நிலையில் அவர்கள்
இருமாதம் ஒருவாரம்
காலம் உன்னை
காணாமல் எப்படி
வாழ்ந்து இருக்ககூடும்
வியப்புடன் நான்...

கீழ்அடித்தளம் இரண்டுள்ள
கட்டிடத்துக்குள் சென்றாலே
கண்இருட்டி பகலிலும்
காணாமல் போய்விடுவேன்...

இரண்டாயிரம் அடிக்குகீழ்
இரவுபகலாக கண்மூடி
பார்த்தாலே நெஞ்சம்
பதைத்து திகைக்கிறது...

உயிருடன் நீங்கள்
இருப்பதை நாங்கள்
உணர்ந்திடவே நாட்கள்
ஆகியது பதினேழு...

இயந்திரத்தை படைக்கும்
நாம் கடவுள்
நம்மை காப்பாற்றும்
அவையும் கடவுளாய் ...

மீண்(ட்)டு உயிர்பெற்று
வந்திருப்பதை படிக்கும்
சமயம் என்னுயிரை
மீண்டும் அடைந்தேன்

மரணம் அல்லாத
மரணத்தை முத்தமிட்ட
ஒவ்வொருநாளும் வாழ்கையின்
மறக்கமுடியா பக்கங்கள்

அனைவர் மனத்தின்
தைரியமும் வலிமையும்
உங்களை மீட்டு
குடும்பத்துடன் ஒன்றிணைத்து...

நம்பிக்கையின் வெற்றி
இனிவரும் நாட்களும்
என்றும் நிலைத்து
மகிழ்ச்சியுடன் நீண்டாயுளுடன்
வாழ்ந்திட இறைவனைவேண்டி
வாழ்த்துகிறேன் உங்களை...

செய்தி வாசிக்க

6 comments:

எஸ்.கே said...

அருமையான வரிகள் கொண்ட கவிதை!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...

தாங்கள் எனக்களிக்கும் ஊக்கத்திற்கு..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

நேரடி ஒளிபரப்பில் நேற்று கண்டேன்.. மீட்டு எடுத்தலை..
ஆச்சர்யம், சந்தோசம், பிரமிப்பு எல்லாம் ஒருசேர உணர்ந்தேன்..
உங்கள் கவிதை வரிகளில் அதை கொண்டு வந்திட்டீங்க..

பகிர்வுக்கு நன்றி.. :-)

Unknown said...

அவர்கள் நிலையுணர்த்திய கவிதை உங்கள் மனதைக் காட்டியது, கல்லிருக்கும் தேரைக்கும் நீர் கொடுக்கும் இறைவன் உள்ளிருந்த இவர்களிற்கும் வெளிச்சத்தைக் காட்டிவிட்டான். உங்களுடன் இணைந்து அவர்களிற்கும் எனது வாழ்த்துக்கள் நண்பா!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆனந்தி,

மிக்க மகிழ்ச்சி... தங்களின் வரவிற்கும் மற்றும் காட்சியை கண்ட சமயம் தோன்றிய மனதின் உணர்வினை இங்கே பதிவு செய்தமைக்கு...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலன்,

மிக்க மகிழ்ச்சி தங்களின் இனிய வரவிற்கு...

மரத்தை வைத்த இறைவன் நீர் ஊற்றுவதும்... நம்மை படைத்த கடவுள் நம்மை காப்பதும் பல நேரங்களில் மனத்திற்கு சுகமாய்...

சிலநேரங்களில் காக்காமல் போகும் சமயம் மனத்திற்கு சோகமாய்...

அவர்கள் குடும்பத்துடன் நல்வாழ்வு வாழ இறைவனை வணங்குவோம்...