நண்பகல் அலுவலகநேரத்திலும்
கண்களில் தூக்கம்...
தூக்கத்தை கலைத்திட
என்னன்னவோ செய்தேன்
நண்பர்களுடன் சற்றேஅரட்டை
அப்பொழுதும் கலையவில்லை
தேனீர் அருந்திபார்த்தேன்
அப்பொழுதும் கலையவில்லை...
உன்நினைவுகளை அசைபோட்டேன்
தூக்கம் கலைந்தது..
ஆனால் மனதுக்குள்
துக்கம் புகுந்தது...
வெளியுலகத்தை பார்த்தேன்
உன்நினைவுகளை கலைக்க
வெளியுலகத்தையே மறக்கசெய்கிறது
உன்நினைவுகள் என்னுள்....
நேற்று கலைந்த தூக்கம்
இன்று இக்கணம்வரை இல்லாமல்
19 comments:
நினைவுகளில் ஆழ்ந்துவிட்டால் வெளியுலகின் நினைவேது நண்பரே...
கவிதை சூப்பர்
அண்ணே கலக்கிட்டிங்க ...
நினைவுகளின் சுகம் சொல்லவே வேணாம் ...
அது ஒரு உலகம் ./
நினைவே ஒரு சங்கீதம்....
அன்புள்ள தினேஷ்குமார்,
மிக்க நன்றி...
ஆமாம் சரியா சொன்னீங்க தோழா.....
நினைவுகள் உலகினை வெல்கிறது...
அன்புள்ள அரசன்,
மிக்க நன்றி....
கனவு உலகம் மாதிரி.. இது நினைவு உலகம்...
கனவு நடக்காமல் போகும்...
நினைவு நடந்தது மட்டுமே....
அன்புள்ள மனோ,
மிக்க நன்றி....
சங்கீதம் போல் மறுமொழி...
நினைவுகளும் இதயத்திற்குள் இசைக்கின்றது...
நினைவுகள் சுகமானது தான்.. இப்படி ஒரு முகமா நினைவுகளுக்கு? அருமையா இருக்குங்க.. :)
//நண்பகல் அலுவலகநேரத்திலும்
கண்களில் தூக்கம்...//
என்னவோ புதுசா சொல்றீங்க.. எப்பவும் இது தானே நடக்குது..
//நண்பர்களுடன் சற்றேஅரட்டை
அப்பொழுதும் கலையவில்லை
தேனீர் அருந்திபார்த்தேன்
அப்பொழுதும் கலையவில்லை...//
வேலை செய்யிறத தவிர மத்த எல்லாமே செய்றது..
//உன்நினைவுகளை அசைபோட்டேன்
தூக்கம் கலைந்தது..
ஆனால் மனதுக்குள்
துக்கம் புகுந்தது...//
அட.. அட..
என்னமா எதுகை மோனை விளையாடுது..
//வெளியுலகத்தை பார்த்தேன்
உன்நினைவுகளை கலைக்க//
வெளில யாரையோ சைட் அடிச்சத மறைமுகமா சொல்றீங்களாக்கும்...
உங்க ஆள் போன் நம்பர் குடுங்க பாஸ்..
//வெளியுலகத்தையே மறக்கசெய்கிறது
உன்நினைவுகள் என்னுள்....//
அப்படியா ஜிந்திச்சீங்க????
//நேற்று கலைந்த தூக்கம்
இன்று இக்கணம்வரை இல்லாமல்//
இன்னைக்கும் அலுவலகத்துல தூங்குனீங்களாக்கும்???
இத நேரடியா சொல்ல வேண்டியதுதானே..
வாழ்த்துக்கள்!
ரொம்ப நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்.
அன்புள்ள தேனு,
மிக்க நன்றி...
// நினைவுகள் சுகமானது தான்.. இப்படி ஒரு முகமா நினைவுகளுக்கு? அருமையா இருக்குங்க.. :)//
நினைவுகளுக்கு பல முகங்கள்... ஒவ்வொருத்தர்குள்ளும் பல நினைவுகள்..
மிக்க மகிழ்ச்சி...
அன்புள்ள இந்திரா,
மிக்க நன்றி....
// என்னவோ புதுசா சொல்றீங்க.. எப்பவும் இது தானே நடக்குது.. //
நீங்க தாலாட்டு பாடாம தூங்கினேன்... இது புதுசு தானே...
// வேலை செய்யிறத தவிர மத்த எல்லாமே செய்றது.. //
பாதிநாள் உங்களுடன் தான் அரட்டை... இதுல நீங்க இங்க சேட்டை வேற...
// அட.. அட..
என்னமா எதுகை மோனை விளையாடுது..//
தூக்கத்தை கலைக்க விளையாடியது...
// இன்னைக்கும் அலுவலகத்துல தூங்குனீங்களாக்கும்???
இத நேரடியா சொல்ல வேண்டியதுதானே.. //
இது மாதிரி நீங்க தைரியமா சொல்லுங்க... தினமும் நான் இப்படித்தான் சாப்பிட்ட பிறகு என்று உணமையை....
அன்புள்ள ரவி,
மிக்க நன்றி...
அன்புள்ள தங்கராஜன்,
மிக்க நன்றி ஐயா...
Post a Comment