Wednesday, March 16, 2011

இறைவனும் கொடியவன்... (1)


நள்ளிரவு நேரம் தொட்டதும்
பாயும் மின்சாரம் போல்
நான்சாலையை கடக்கும் முன்பே
என்னை கடந்தது வாகனமொன்று
கண்கள் அயர்ந்து இருக்கவில்லை - ஆனால்
கண்மூடி திறக்கும் நொடிக்குள்ளே...

முற்பிறவியில் என்னபாவம் செய்தேனோ?
மயிரிழையில் என்னுயிர் பிழைத்து...
உள்ளம் சிதைந்து மண்ணில்
நித்தம் கண்ணீரோடு வாழ்வதைவிட
உடல் சிதைந்து விண்ணில் - கலந்திருந்தால் 
மகிழ்ச்சியாய் எனக்குள் இருந்திருக்கும்...

நான் இறந்தாலும் செல்வது நரகம்தான்
உந்தன் மனதில் குடியேறிய காரணத்தினால்
இன்று உயிரோடு இருப்பதும் நரகம்தான்
எந்தன் மனதில் குடியேறாத காரணத்தினால்
இறந்தும் விடியும்வரை ஆதரவின்றி கிடந்திருப்பேன் - ஒருவேளை
இன்றிருப்பதை போலவே விபத்துக்குள்ளாகிருந்தால்.

8 comments:

Pranavam Ravikumar said...

மிக அருமை... ஏதோ ஒரு வலி,வாசித்தபின்...

வாழ்த்துக்கள்!

arasan said...

வரிகளை படிக்கும் போதே நெஞ்சுக்குள்
ஒரு வித இறுக்கம் ஏற்படுகிறது அண்ணே ..

சமுத்ரா said...

hmmm ok:)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரவி,

மிக்க நன்றி...

வலிகளை மறக்க வழிகளை தேடிக்கொண்டு...

தங்களின் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி...

இறுக்கங்களால் தினம் உருகிக்கொண்டே இந்த மனது...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சமுத்ரா,

மிக்க நன்றி...

தடம் மாறிய யாத்ரீகன் said...

விபத்தை கூட இவ்வளவு நல்ல கவிதையாக்க முடியுமா!!!!! கற்கிறேன் உங்களிடமிருந்து....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அசோக்குமார்,

மிக்க நன்றி...

தங்களின் அன்பான முதல்வரவிற்கும் இனிய பின்னூட்டத்திற்கும் மிக்க மகிழ்ச்சி...

தங்களின் வரவை என்றும் இவன் நாடி...