Monday, May 3, 2010

கூந்தலும்...கொண்டையும்...


என்னவளே!..
நீர்வீழ்ச்சி போல் கொட்டியும்
அடி முதுகின் வரை
கங்கை போல் பாய்ந்தும்
இருந்தவளை....
அகத்தியனின் கமண்டலத்தில்
அடைக்கப்பட்ட கங்கையை போல்
உச்சங்தலைக்கும் கழுத்திற்கும்
இடையே உன்னால் அடைக்கப்பட்டும்
கண்களை கவர்ந்துக்கொண்டு...

14 comments:

Anonymous said...

இடையே உன்னால் அடைக்கப்பட்டும்
கண்களை கவர்ந்துக்கொண்டு...


ரசனை என்று வந்துவிட்டால்...எதுவும் தப்புவதில்லை..

அந்த போட்டோக்கூட உங்கள் கவிதைக்கு கட்டியம் கூறியதைபோல..

pon

S.M.சபீர் said...

அருமையான ரசனை நண்பா உங்கள் ரசனை உங்கள் அசத்தல் தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

poda thuman pick up drop escape da

Unknown said...

ennda mapla eppadi ayeta kavitahi utru ennai kalangadikuthu, appdinu solluvenu parthi ya unaku vera velai ye illaya

Unknown said...

mpalai seerum pambai nambu sirikum pennai nambadhe enna ok va, sogama iruntha than kavithai varum, Joly ya irukanum na quarter adichuthu kondadu, kavidahi valara en valthukal

mufees said...

அருமையாக உள்ளது வாசன்

Unknown said...

கூந்தல் கலைந்தபோதும் அழகு கொண்டையாகக் கட்டிய போதும் அழகு அதுவே உங்கள் கவிதையில் பேரழகு :)
பாராட்டுக்கள் வாசன் தொடருங்கள்

கமலேஷ் said...

வாசன் சரி form - ல இருக்கீங்க போல...ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

தங்களை போன்றவர்களின் ரசிப்பிற்கும் என் முதற்கண் நன்றி...

தங்கள் வரிகளின் வழியே ஆன விமர்சனத்திற்கு மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

எழுதியது நான் ஆகினும் இதனை ரசித்து உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்துக்கொள்ளும் உணர்வே உண்மையான அசத்தல்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கிருஷ்ணன்,

டேய் நண்பா... உன்னுடைய வரவிற்கும், கருத்திற்கும் & வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

சந்தோஷமானாலும் சரி, கவலையா இருந்தாலும் எழுத்தா எழுதிட்டா மனசு கொஞ்சம் பிரியா இருக்கும். நாளை எடுத்து படித்தாலும் நமக்கும் பிறருக்கும் கொஞ்சம் பழைய நினைவுகளை அசைபோட வைக்கும் இல்லையா?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முபிஸ்,

தங்களின் வருகைக்கும் உணர்வின் பகிர்விற்கும் நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலன்,

தங்களின் வார்த்தையின் வழியே காண்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

நீங்க எல்லாரும் formல இல்ல அதனால என்னவோ நான் உங்களுக்கு formல இருக்குற மாதிரி இருக்குனு நினைக்கின்றேன்...

மிக்க நன்றி...