Sunday, May 9, 2010

கோடையில் ஓர் காதல்...

பெண்ணை கண்டதும் காதல் பிறக்கும்
உன்னை காதல் கொண்டும் மலரவில்லை
காரணம்,
நான் கவிஞன் இல்லை!
காதலனாய் என்றென்றும்...
இன்று நான் கவிஞன்!
இங்கு நீ கவிதையாய்...
காரணம்,
கோடையின் பிறப்பா? - அல்ல
உன்னின் சிறப்பா?


தார்சாலையில்
தனியே சென்றேன்
எதற்கோ தலைகுனிந்தேன்
என்முகத்தை தரையில் கண்டேன்
பயந்தேன் சூரியனை எண்ணி!!!
சற்றே நிமிர்ந்தேன் - உன்
குனிந்த முகத்தில் அவனை கண்டேன்
வியந்தேன் உன்னை எண்ணி!!!
மயங்கி போனேன்
காரணம்,
கோடையின் சதியோ? - அல்ல
இந்த மதியோ?


மேகமாய் நீ இருந்தால்
தென்றாலாய் நான் வருவேன் - என்
மோகம்தன்னை அறிந்திடுவாய்!
தேகம்தன்னை அளித்திடுவாய்!!!
தூறல் பொங்கிடுமே...
காரணம்,
கோடையின் வியர்ப்பா? - அல்ல
உன்அன்பின் நனைப்பா?


கோடையில்...

உன்...
வாடைகாற்று வீசினாலே போதும்!
ஓடைகாற்றும் குளிரும் வேண்டாம்!!!

உன்...
சேலைமுகப்பு குடைபிடித்தாலே போதும்!
இளம்சோலை நிழலும் வேண்டாம்!!!

உன்...
இதழ்களின் முத்தமொன்று போதும்!
பழங்களின் பிளிசாறும் வேண்டாம்!!!

உன்...
கரம்கோர்த்து நடந்தால் போதும்!
கரையோரங்கள் எதுவும் வேண்டாம்!!!



வேண்டாம் வேண்டாம்
கோடை எவருக்கும்!
வேண்டும் வேண்டும்
கோடை எனக்கு மட்டும்!!!


காதலியின் அருமையை உணர்ந்தேன்
கோடையின் பெருமையாய் உன்னில்...

18 comments:

S.M.சபீர் said...

நண்பரே பின்னிபுடீங்க ரொம்ப அருமையான முத்துபோன்ர வரிகளாக உள்ளளன.ரொம்ப அனுபவமோ வாசனைத் தோழா.வாழ்த்துக்கள் நண்பா

அண்ணாமலை..!! said...

கோடை- காதல் ஒப்பிடலா..!!
கலக்குங்கள் வாசன்!
அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது..நண்பரே....

Unknown said...

படத்துடன் கவிதை அருமை வாசன்

cc said...

........excellent lines...keep it up.......expected some more lines too.......may be out of greedy!!!!!

Aathira mullai said...

இதுவரைக்கும் உங்கள் காதல் கவிதைகளைப் படித்திருந்தாலும் தங்கள்ளுக்குச் சிந்தனைச் சிற்பி என்றே பெயரிட்டு இருந்தேன்..இக்கவிதையைப் படித்த பின்பு தங்களுக்குக் காதல் கவிஞன் என்றே பெயர் சூட்ட விளைகிறேன்...அருமை.. வாழ்த்துக்கள் வாசன்...தொடர..

சிவா said...

அருமை வாசன்!!!

சம்சுதீன் said...

நண்பா கவிதைகள் அனைத்தும் அருமையாகவுள்ளது

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்பு தோழா சபீர்,

வாசனைத்தோழா புதுமையாக தாங்கள் எனக்களித்த பெயரோ?

முத்து போன்ற தங்களின் வரிகளே என் சொத்துகள்...

மிக்க நன்றி தோழா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

தங்களின் அன்னைக்கு என்னின் வாழ்த்துகளும்...

எல்லாம் ஓர் முயற்சிதான்...

தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

மிக்க மகிழ்ச்சி நண்பா...

தங்கள் உடல் நலம் பூர்ண குணமடைய என் வாழ்த்துகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலன்,

தங்களின் பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள CC,

தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் மற்றும் உங்கள் மனதின் கருத்தினை பதிவு செய்தமைக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும்.

தங்களின் தளத்தில் உள்ள புகைபடங்கள் அனைத்தும் அருமையாய் கண்களை கவரும் வகையில்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

தாங்கள் எந்தப்பட்டத்தையும் கொடுத்தாலும் தலைவணங்கி ஏற்றுக்கொள்வது என் கடமை.

தங்களின் தொடர் ஊக்கத்திற்க்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்னின் எல்லா கவிதைகளை
படித்ததற்கும், படிப்பதற்கும் மட்டும் ஓர் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சிவா அண்ணா,

தங்களின் பொன்னான வரவு எனக்கு மேலும் பெருமை அளிக்கின்றது.

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சம்சுதீன்,

என்னின் எல்லா கவிதைகளின் மீதான தங்களின் பார்வைக்கும் பாராட்டுதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல...

சம்சுதீன் said...

அருமை வரிகள் வாசன் கோடை காதல்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சம்சுதீன்,

நண்பா! தங்களின் மறுபார்வைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி...